Blood Sugar Control : இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க, நீரிழிவு நோயாளிகள் பல நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையை மேம்படுத்துவதன் மூலம் மட்டுமே அதைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
Tips To Diabetic Patient : இரவில் தூங்கும் முன் இந்த குறிப்புகளை பின்பற்றினால், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
மிகவும் தீவிரமான பிரச்சனையான சர்க்கரை நோயை வேரோடு அழிக்க வேண்டும் என்று நினைத்தாலும், அதை ஒருபோதும் அழிக்க முடியாது. அழையா விருந்தாளியான சர்க்கரை நோயை கட்டுப்படுத்தத்தான் முடியும். அதற்கு இரவு நேரத்தில் செய்ய வேண்டிய வேலைகள் என்ன என்பதைத் தெரிந்துக் கொள்வோம்
சர்க்கரை அதிகமாக இருப்பவர்கள், இரவு நேரத்தில் கடைபிடிக்க விஷயங்களில் முக்கியமானது விரைவில் இரவு உணவை உண்பது தான். நேரம் கழித்து உண்பதும், அதிக அளவில் உண்பதையும் தவிர்க்க வேண்டும்
இரவு நேரத்தில் தேநீர் அல்லது காபி குடிக்கக்கூடாது. ஏனென்றால் அது தூக்கத்தை கெடுக்கும், நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 8 மணி நேர தூக்கம் அவசியம் என்பதால், இரவில் தேநீர், காபியை தவிர்க்கவும்
உணவு உண்ணுவதில் கவனக்குறைவாக இருந்தால், அது சர்க்கரை அளவை அதிகரிக்கும். எனவே, இரவு முழுவதும் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க, இரவு உணவில் கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளின் கலவையைச் சேர்க்கவும்.
இரவு உணவுக்கு பிறகு சிறிது நேரம் நடப்பது உடலுக்கு நல்லது. இது சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்
உறங்கச் செல்வதற்கு முன் தியானம் அல்லது சுவாசப் பயிற்சிகளையும் செய்யலாம். இது மன அழுத்தத்தைக் , குறைக்கவும், நல்ல தூக்கத்தைப் பெறவும் உதவுகிறது. ஆந்த உறக்கம், சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவும்.
காலையில் வெந்தயத்தை உண்பது நல்லது. அதனால், நீரிழிவு நோயாளிகள் இரவின் உறங்கச் செல்வதற்கு முன்னதாக, வெந்தயத்தை நீரில் ஊற வைப்பதை மறக்க வேண்டாம்