இந்திய அணியில் ரிஷப் பந்துக்கு பேவரிட்டிசம்... சஞ்சு சாம்சனுக்கு மட்டும் ஏன் இந்த போராட்டம்?

மோசமாக விளையாடியும் இந்திய அணியில் ரிஷப் பந்த் இடம்பிடித்துவிடும் நிலையில், சிறப்பாக ஆடும்போதும் சஞ்சு சாம்சனுக்கு மட்டும் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்க அவர் காத்திருக்க வேண்டியுள்ளது.

சஞ்சு சாம்சனுக்கு தொடர்ச்சியாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் சிறப்பாக ஆடியபோதும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படுவதில்லை. 

1 /8

இந்திய அணியில் சமீப காலமாக பட்டவர்த்தனமாக ஓரங்கப்பட்டப்படும் பிளேயர் என்றால் அது சஞ்சு சாம்சன் தான். ஒருநாள் போட்டி, டி20 போட்டி என எதுவாக இருந்தாலும் கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாக ஆடி விடுகிறார்.

2 /8

தென்னாப்பிரிக்கா சென்ற இந்திய அணியில் இடம்பிடித்திருந்த சஞ்சு சாம்சன் அந்தஅணிக்கு எதிராக அபாரமாக விளையாடி சதமடித்திருந்தார். ஆனால், அவருக்கு இப்போது இந்தியா விளையாடப்போகும் ஒருநாள் போட்டிக்கான அணியில் இடமில்லை. 

3 /8

அவருக்கு பின்னால் அணியில் இடம்பிடித்தவர்களுக்குகூட தொடர்ச்சியாக ஆடும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. ஆனால், யாராவது காயமடைந்தால் தான் அந்த இடத்துக்கு சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.

4 /8

அதுவும் ஒன்றிரண்டு போட்டிகள் தான். அந்த வாய்ப்பிலும் சஞ்சு சாம்சன் ஏதேனும் கம்மியான ஸ்கோரில் அவுட்டாகிவிட்டால் அடுத்த வாய்ப்பு கொடுப்பதில்லை. இதுஒருநாள் போட்டியில் மட்டுமில்லை, டி20 இந்திய அணியிலும் அவருக்கான இடத்துக்கு போராட வேண்டியிருக்கிறது.

5 /8

ஜிம்பாப்வே சுற்றுப் பயணம் செய்த இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அந்த தொடரிலும் சஞ்சு சாம்சன் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்திருந்தார். ஆனால் இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் பிளேயிங் லெவனில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. 

6 /8

சுப்மன் கில் காயம் அடைந்ததால், இரண்டாவது போட்டியில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை இப்போட்டியில் சஞ்சு சாம்சன் நன்றாக ஆடிவிட்டால் கூட அடுத்த போட்டியில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா? என்பது சந்தேகம் தான்.

7 /8

அதேநேரத்தில் ரிஷப் பன்ட் இதுவரை இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் 75 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அவருடைய சராசரி 22, ஸ்டைக் ரேட் வெறும் 127 தான். யுவ்ராஜ் சிங்கை விட அதிக டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடிவிட்டார். ஆனால், அவருடைய ரெக்கார்டு எல்லாம் மிக மோசம்.

8 /8

அப்படி இருந்தும் டி20 போட்டிக்கான இந்திய அணியில் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. சிறப்பாக ஆடினாலும் சஞ்சு சாம்சன் வெளியே உட்கார வைக்கப்படுகிறார். இந்த மர்மம் என்ன? என்பது பிசிசிஐக்கு மட்டுமே தெரியும். ரசிகர்கள் இந்த விவாகரத்தில் பிசிசிஐ மீது செம கடுப்பில் உள்ளனர்.