உடல் ஆரோக்கியமாக இருக்க பல்வேறு ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகிறது. அந்த வகையில் வைட்டமின் பி12 செரிமானம் முதல் இதய ஆரோக்கியம் முதல் பலவற்றிற்கு உதவுகிறது.
வைட்டமின் பி12 ஆனது உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு அதிகம் உதவுகிறது. வைட்டமின் பி12 இல்லை என்றால் இரத்த சோகைக்கு வழிவகுக்கும். மேலும் உடல் ஆற்றலுடன் இருக்க உதவுகிறது.
வைட்டமின் பி12 நரம்பு செல்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. மேலும் நரம்பு சேதம், கோளாறுகளை தடுக்க உதவுகிறது. உடல் சோர்வை குறைத்து புத்துணர்ச்சியாக இருக்க உதவுகிறது.
வைட்டமின் பி 12 மூளை ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் செயல்பாடுகளுக்கு இவை அவசியம். மேலும் மனநிலையை ஒழுங்குபடுத்தும் இரசாயனத்தை உருவாக்க உதவுகிறது.
வைட்டமின் பி12 இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் ஆரோக்கியமான தோல், முடி பராமரிப்பிறகு இவை முக்கியமானது.
உடல் நல்ல முறையில் செரிமானம் அடைய வைட்டமின் பி12 முக்கியமானது. இவை செரிமான அமைப்பை வேகப்படுத்தி, குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.
உடல் ஆரோக்கியமாக இருக்க எலும்பு ஆரோக்கியம் அவசியம். வைட்டமின் பி12 இதற்கு பெரிதும் உதவுகிறது மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை குறைக்கிறது.