இரவு உணவை தவிர்த்தால் உடல் எடை குறையுமா? மருத்துவர்கள் கூறுவது என்ன?

சிறந்த உடல் தோற்றத்தை பெற பலரும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். உடல் எடையை குறைத்து, ஸ்லிம்மாக இருப்பது அதில் முக்கிய பகுதியாகும். 

 

1 /5

உடல் எடையை குறைக்க ஜிம்மிற்கு செல்வது, டயட்டில் இருப்பது என்று ஒவ்வொருவரும் அவர்களுக்கு ஏற்ற முயற்சிகளை செய்து வருகின்றனர். இது தவிர எடை குறைப்பு மாத்திரை, பவுடர் போன்றவற்றையும் பயன்படுத்துகின்றனர். இவை சிலருக்கு ஆபத்தான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.   

2 /5

உடல் எடையை குறைக்க பலரும் செய்யும் முதல் விஷயம் உணவைத் தவிர்ப்பது ஆகும், குறிப்பாக இரவு நேர உணவு. இரவு உணவைத் தவிர்ப்பதால் பல உடல் நல பிரச்சனைகள் ஏற்படும் என்பதை பற்றி பலரும் அறிந்திருப்பதில்லை.    

3 /5

இரவு உணவு தூங்கும் முன் உடலுக்கு தேவையான கலோரிகள் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இரவு முழுவதும் எந்த உணவையும் நாம் சாப்பிட போவது இல்லை என்பதால் தூங்கும் முன் நன்றாக சாப்பிட வேண்டும்.    

4 /5

இரவு உணவை தவிர்த்தால் உடல் எடை குறையும் அதே வேளையில், பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இது உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை பாதித்து, சத்து குறைபாடுகளை ஏற்படுத்தும்.  

5 /5

அதே போல இரவு உணவைத் தவிர்ப்பது சர்க்கரை அளவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். மேலும் இரவு உணவைத் தவிர்ப்பது மன நலனில் தீங்கு விளைவிக்கும். அதே போல பதட்டம் மற்றும் தூக்கமின்மை போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.