World Adoption Day: தனிநபர்களும் தத்தெடுப்பதை அனுமதிக்கும் நாடுகள் இவை...

இன்று உலகம் முழுவதும், தத்தெடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. குழந்தை வீட்டில் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.  தனிப்பட்ட சூழ்நிலைகள் காரணமாக குழந்தைகள் வீட்டில் இல்லாமல் இருக்கலாம். அந்த சந்தர்ப்பங்களில் குழந்தைகளை தத்தெடுக்க சட்டபூர்வ நடைமுறைகள் உள்ளன.

குழந்தையை தத்தெடுப்பதற்கான விருப்பம் இரண்டு வகைப்படுகிறது. திருமணமான தம்பதிகள் குழந்தையை தத்தெடுப்பார்கள். சிலர், திருமணம் செய்துக் கொள்ளாமல் தனியாக இருப்பவர்களும் குழந்தையை தத்தெடுக்க விரும்புகின்றனர். அதற்கு சில நாடுகள் அனுமதிக்கின்றன.

ALSO READ | குழந்தைகள் தின விழாவின் வரலாறும் முக்கியத்துவமும்

1 /6

திருமணம் செய்துக் கொள்லாமல் தனியாக வசிக்கும் ஆண்களும், பெண்களும் தத்தெடுக்க இந்திய சட்டங்கள் அனுமதிக்கின்றன. தத்தெடுக்கக்கூடிய குழந்தைகளுக்கு குறைந்தது ஐந்து வயது இருக்க வேண்டும். மேலும், திருமணமாகாத ஆண்களால், ஆண் குழந்தைகளை மட்டுமே தத்தெடுக்க முடியும். திருமணமாகாத பெண்களுக்கு இந்த கட்டுப்பாடு இல்லை

2 /6

​சீனாவில் தனியாக வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே தத்தெடுக்க அனுமதி உண்டு. சிறப்பு கவனிப்புத் தேவைப்படும் மாற்றுத் திறனாளி குழந்தைகளையும் தத்தெடுக்கலாம்.  சீனாவின் ஸ்பெஷல் ஃபோகஸ் திட்டம் (China's Special Focus Program) தனியாக வசிக்கும் பெண்கள் ஒற்றை பெற்றோராகும் வாய்ப்புகளை வழங்குகிறது.

3 /6

இரு பாலினத்தவரையும் ஒற்றை பெற்றோராக ஏற்றுக்கொண்டாலும், வியட்நாமில் திருமணமான தம்பதிகளுக்கே தத்தெடுப்பில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

4 /6

பிலிப்பைன்ஸில் 27 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஒற்றைப் பெண்களுக்கு மட்டுமே தத்தெடுக்க அனுமதி உண்டு. இருப்பினும் திருமணமான தம்பதிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். ஒன்பது முதல் 15 வயதுக்குட்பட்ட சிறப்பு கவனம் தேவைப்படும் மாற்றுத் திறனாளி குழந்தைகளையும் தத்தெடுக்கலாம்.  

5 /6

ஹங்கேரியில் ​​தனியாக வசிக்கும் பெண்கள் மட்டுமே தத்தெடுக்க முடியும்  10 வயது அல்லது அதற்கு மேற்பட்ட சிறார்கள் மட்டுமே தத்து கொடுக்கப்படுவார்கள்.

6 /6

கொலம்பிய அரசாங்கம் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரையும் தத்தெடுக்க அனுமதிக்கிறது, ஆனால் சிறப்புத் தேவையுடைய குழந்தைகள் தத்தெடுக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்ல, சமீபத்தில் ஓரினச்சேர்க்கை ஜோடிகளும் தத்தெடுக்கலாம் என்று கொலம்பியா அனுமதி கொடுத்துள்ளது.