வயது அதிகமாக, அதிகமாக நரை முடி ஏற்படுவது சகஜம் தான். 50 வயதை தாண்டியவுடன், தலை முடி நரைக்க ஆரம்பிக்கும். ஆனால் சிலருக்கு இளம் வயதிலேயே தலைமுடி நரைக்க ஆரம்பித்து விடுகிறது. இதை அலட்சியம் செய்யாதீர்கள்.
இன்றைய மோசமான வாழ்க்கை முறை காரணமாக, சிறு வயதிலேயே நரைமுடி ஏற்படும் பிரச்சனை அதிகமாகி விட்டது. இதனை அலட்சியப்படுத்தாமல், அதற்கான காரணங்களை அறிந்து, தீர்வினை ஏற்படுத்த வேண்டும்.
இளம் வயதில் ஏற்படும் நரைமுடி, தோற்றத்தை பாதித்து, ஒருவித தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தலாம். இதனால் தன்னம்பிக்கை குறையலாம். இந்நிலையில், இளநரை ஏற்படுவதற்கான காரணங்கள், குறித்து அறிந்து கொள்ளலாம். சில குறைபாடுகள் அல்லது உடல் நல பிரச்சனைகள் ஆகியவற்றின் அறிகுறியாக இளநரை இருக்கலாம் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
உடலில் துத்தநாக சத்து குறைபாடு இருந்தால், இளநரை முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு தீர்வு காண , துத்தநாகம் நிறைந்த உணவு பொருட்களை டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உணவில் வைட்டமின் பி2 சத்து குறைபாடு இருந்தாலும், நரைமுடி பிரச்சனை ஏற்படலாம். பி 12 குறைபாட்டால் ஹார்மோன் சமநிலை பாதிக்கப்பட்டு, நரைமுடி மற்றும் முடி உதிர்தல் பிரச்சனை அதிகரிக்கிறது.
ரத்த சோகையும் நரை முடி அளவை இதில் ஏற்படுவதற்கான ஒரு காரணம். உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால், உடலின் பெரும்பாலான பகுதிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் போகும். இதனால் இளநரை ஏற்படலாம்.
தைராய்டு பிரச்சனை இருந்தாலும், இளநரை ஏற்படும் என்று சுகாதார வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். நரை முடி மட்டுமல்லாது, முடி உதிர்தல் சோர்வு உடல் பருமன் ஆகிய பிரச்சனைகளும் ஏற்படும்.
தலையில் ஏற்படும் பூஞ்சை தொற்று காரணமாகவும் இளநரை பிரச்சனை ஏற்படும். இதனால் தலைமுடியை சுத்தமாக பராமரிப்பதும், சரும நிபுணரிடம் சென்று ஆலோசனை பெறுவதும் தீர்வை கொடுக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.