லோக்பால் மசோதா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ராம்லீலா மைதானத்தில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொள்ளவுள்ளார்.
லோக்பால் மசோதா, லோக் ஆயுக்தா, தேர்தல் சீர்திருத்தம் ஆகிய மூன்றையும் வலியுறுத்தி, இன்று முதல் டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க உள்ளதாக அன்னா ஹசாரே தெரிவித்திருந்தார்.
முன்னதாக கடந்த 2011-ம் ஆண்டு ஊழலற்ற இந்தியாவை உருவாக்கும் வகையில் லோக்பால் அமைப்பை கொண்டுவர வலியுறுத்தி டெல்லி ராம்லீலா மைதானத்தில் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தார்.
#Visuals from Ramlila Maidan in #Delhi where social activist Anna Hazare's will today begin an indefinite fast demanding a competent Lokpal and better production cost for farm produce pic.twitter.com/X0zT19x2aM
— ANI (@ANI) March 23, 2018