சாவித்ரியின் நடிகையர் திலகம் படத்திற்கு 'யு' சான்றிதழ்!!

மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு குறித்த ‘நடிகையர் திலகம்’ திரைப்படத்திற்கு தணிக்கை குழு ’யு’ சான்று அளித்துள்ளது!  

Updated: May 5, 2018, 03:43 PM IST
சாவித்ரியின் நடிகையர் திலகம் படத்திற்கு 'யு' சான்றிதழ்!!

தென்னிந்திய சினிமாவை கலக்கிய மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும், தெலுங்கில்  ‘மகாநதி’ என்ற பெயரிலும் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சாவித்திரி வேடத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சாவித்திரி வேடத்திற்காக தினமும் நான்கு மணி நேரம் மேக்கப் போட்டி நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

அதேபோல, படத்தின் நாயகனா "ஜெமினி கணேசன்" வேடத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சமந்தா, நாகசைத்தன்யா, விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே மற்றும் பலர் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு வரும், இந்த படத்தை அஸ்வின் நாக் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் ‘நடிகையர் திலகம்’ (மகாநதி) திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு இந்த படம் தணிக்கைக் குழுவினருக்கு திரையிடப்பட்டது. இந்த படத்தைப்பார்த்த அதிகாரிகள் எந்தவொரு கட்டும் கொடுக்காமல், நடிகையர் திலகம் படத்திற்கு கிளீன் யு சான்றிதழ் அளித்துள்ளனர்.