விடுதலை 2 படத்தில் விஜய்க்கு உள்குத்து! வெற்றிமாறன் வைத்த வசனத்தால் சர்ச்சை..

Viduthalai Part 2 Controversy : விடுதலை 2 திரைப்படம், சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் ஒரு டைலாக் விஜய்யை தாக்கி எழுதப்பட்டிருக்கலாம் எனக்கூறப்படுகிறது.  

Written by - Yuvashree | Last Updated : Dec 21, 2024, 09:07 AM IST
  • விடுதலை பாகம் 2 படம் சமீபத்தில் வெளியானது
  • இதில் விஜய்யை தாக்கி ஒரு டைலாக் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது!
  • அது என்ன டைலாக்?
விடுதலை 2 படத்தில் விஜய்க்கு உள்குத்து! வெற்றிமாறன் வைத்த வசனத்தால் சர்ச்சை.. title=

Viduthalai Part 2 Controversy : வெற்றிமாறன் இயக்கத்தில் டிசம்பர் 20ஆம் தேதியான நேற்று வெளியான படம், விடுதலை பாகம் 2. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படத்தில் இடம் பெற்றிருந்த ஒரு டைலாக், விஜய்யை தாக்கி எழுதப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 

விடுதலை பாகம் 2: 

தமிழ் திரையுலகில் மிக முக்கிய இயக்குநர்களுள் ஒருவராக வலம் வருகிறார் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் இதுவரை வெளிவந்த அனைத்து படங்களும் ஹிட் அடித்துள்ளன. இந்த நிலையில், இவர் இயக்கத்தில் சமீபத்தில் விடுதலை பாகம் 2 படம் வெளியானது. கடந்த ஆண்டு சூரி ஹீரோவாக நடிக்க வெளியான விடுதலை படத்தின் தொடர்ச்சியாக இப்படம் வெளிவந்துள்ளது. இதில், வாத்தியார் கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இந்த படத்தில் அவரது கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. 

பல படங்களில் காமெடியனாக பார்த்த சூரியை, கை தேர்ந்த நடிகராக அறிமுகப்படுத்தியது, விடுதலை முதல் பாகம். இதில் அவருடன் சேர்ந்து பவானி ஸ்ரீ என்பவரும் நடித்திருந்தார். தற்போது வெளியாகியிருக்கும் விடுதலை 2 படத்தில் விஜய் சேதுபதியுடன் மஞ்சு வாரியர், கென் கருணாஸ், கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.  

விஜய்யை அட்டாக் செய்து டைலாக்?

நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் அரசியல் கட்சியை ஆரம்பித்ததில் இருந்து பல்வேரு தரப்பில் இருந்தும் விமர்சனங்களும் எதிர்ப்பும் கிளம்பியது. தற்போது விடுதலை 2 படத்திலும் விஜய்யை மறைமுகமாக தாக்கும் வகையில் வெற்றிமாறன் ஒரு டைலாக்கை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. 

“ஒரு முதலமைச்சர் அவனது பிறப்பை வைத்து தேர்ந்தெடுக்கப்படக்கூடாது. ஒரு மாநிலத்தை சரியான சித்தாந்தம் கொண்ட தலைவர்கள்தான் ஆள வேண்டும்” என்பது போன்ற டைலாக் இடம் பெற்றிருக்கிறது. இது, ஒரு வேளை விஜய்யை தாக்கி எழுதப்பட்டிருக்குமோ என்று சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், இதனை உறுதிப்படுத்தும் வேறு எந்த அம்சமும் இந்த படத்தில் இல்லை.

மேலும் படிக்க | ஓவர் புரட்சி! விடுதலை 2 படம் எப்படி? ட்விட்டர் X தள விமர்சனம்!

படம் எப்படியுள்ளது? 

வெற்றிமாறன் படம் என்றாலே அதில் எவ்வளவு பெரிய ஹீரோ நடித்திருந்தாலும், கதைதான் அதில் ஹீரோவாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். இதுவரை அவர் எடுத்திருந்த பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை உள்ளிட்ட அனைத்து படங்களும் அப்படித்தான். தற்போது வெளியாகியிருக்கும் விடுதலை பாகம் 2 படமும் அதே விமர்சனத்தையே பெற்றுள்ளது. இதில், வாத்தியார் கதாப்பாத்திரத்தின் முன்கதை காண்பிக்கப்பட்டுள்ளது. அவர் ஏன் புரட்சியாளனாக மாறினார் என்பதும் இதில் கூறப்பட்டிருக்கிறது. அதுவும், ரசிகர்களுக்கு எந்த இடத்திலும் கவனச்சிதறல் ஏற்படாதபடி காட்சியமைப்புகள் இடம் பெற்றுள்ளன. 

விஜய் சேதுபதியை தாண்டி, விடுதலை 2 படத்தில் கவனம் ஈர்க்கும் கதாப்பாத்திரமாக இருந்தது, கருப்பன் எனும் பாத்திரம். இதில் நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் நடித்திருக்கிறார். இவரது கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் கிடைத்திருக்கிறது. 

மேலும் படிக்க | வெற்றிமாறனின் விடுதலை 2 படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News