#Karnataka: அரசியலில் இருந்து விடைப் பெறுகிறாரா சித்தராமையா?

இனி வரும் தேர்தல்களில் போட்டியிட மாட்டேன் என கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்!

Last Updated : May 13, 2018, 02:16 PM IST
#Karnataka: அரசியலில் இருந்து விடைப் பெறுகிறாரா சித்தராமையா? title=

இனி வரும் தேர்தல்களில் போட்டியிட மாட்டேன் என கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்!

70 வயதினை நெறுங்கியுள்ள சித்தராமையா அவர்கள், தற்போது நடைப்பெற்றுள்ள தேர்தலில் தனி பெரும்பான்மையோடு வெற்றி பெறும் பட்சத்தில் அடுத்த 5 ஆண்டு காலத்திற்கு முதல்வராக இவர் பதவி வகிப்பார். இதன்மூலம் தனது பதவிகாலத்தில் இருக்கும் போதே 75 வயதினை நிறைவு செய்யும் இவர், பின்னர் ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஓய்வு எடுத்துக்கொண்டு கட்சிப் பணியில் மட்தும் செயல்பட திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்த அறிவிப்பினை இன்று மைசூரில் செய்தியாளர்களை சந்திக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து கட்சியினரை வழிகாட்டும் பணியில் ஈடுபடபோவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்று கர்நாடக தேர்தல் முடிவடைந்து தேர்தல் பிந்தைய கருத்துகணிப்புகள் வெளிவந்த நிலையில் சித்தராமையா இவ்வாறு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது!

#KarnatakaElection2018...

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு நேற்று 7 மணி அளவில் தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெற்றது.

மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. பெங்களூரு ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயகுமார் மரணம் அடைந்து விட்டதாலும், ஆர்.ஆர். நகர் தொகுதியில் பத்தாயிரம் வாக்களர் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதால் அங்கு தேர்தல் நிறுத்தப்பட்டது. இவ்விரு தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வரும் 28-ஆம் நாள் மற்றும் வாக்கு எண்ணிக்கை வரும் 31-ஆம் நாள் நடைப்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது வரும் 15-ஆம் நாள் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் 30-க்கும் மேற்பட்ட தமிழர்கள் உட்பட 2,622 பேர் போட்டியிட்டனர். தேர்தலை ஒட்டி மாநிலம் முழுக்க 55,600 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, 3.5 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

நேற்று நடைப்பெற்ற இத்தேர்தலில் 72.13% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமை தேர்ல் ஆணையம் அறிவித்துள்ளது.

Trending News