அடிச்சது லக்! ராகுலுக்கு புது போன் வழங்கிய சிவக்குமார்!

மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செல்பி எடுத்த இளைஞரின் செல்போனை தட்டிவிட்ட நடிகர் சிவக்குமார் அதே இளைஞருக்கு ரூ. 21 ஆயிரம் மதிப்பிலான செல்போனை வாங்கி பரிசளித்திருக்கிறார்.

Last Updated : Nov 2, 2018, 01:55 PM IST
அடிச்சது லக்! ராகுலுக்கு புது போன் வழங்கிய சிவக்குமார்! title=

மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செல்பி எடுத்த இளைஞரின் செல்போனை தட்டிவிட்ட நடிகர் சிவக்குமார் அதே இளைஞருக்கு ரூ. 21 ஆயிரம் மதிப்பிலான செல்போனை வாங்கி பரிசளித்திருக்கிறார்.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்ட தனியார் கருத்தரிப்பு மையத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார் மற்றும் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின்போது சிவக்குமார் அவர்களுடன் செல்பி எடுக்க வந்த இளைஞர் ஒருவர் நடிகர் சிவக்குமாரின் அனுமதி இன்றி செல்போனை அவர் முன் உயர்த்தினார். யாரும் எதிர்பாராத அந்த வேலையில் ரசிகரின் செல்போனை நடிகர் சிவக்குமார் தட்டி விட்டார். 

இந்த சம்பத்தினை தொடர்ந்து சமூக ஊடகங்களில் நடிகர் சிவக்குமார் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து நடிகர் சிவக்குமார் கடந்த அக்டோபர் 30ம் தேதி வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில்,  "ஆர்வமிக்க ரசிகர்கள் கட்டுக்கடங்காத கூட்டத்தில் உணர்ச்சி வசப்பட்டு அப்படிதான் நடந்து கொள்வார்கள். பிரபல கலைஞர் அதையெல்லாம் பொருத்து கொள்ளத்தான் வேண்டும். மக்கள் தவறு என நினைக்கும் பட்சத்தில் உளமாற வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் நடிகர் சிவக்குமார் சார்பில் தீபாவளி பரிசாக ராகுலுக்கு ரூ.21 ஆயிரம் மதிப்பிலான புதிய செல்போன் நேரில் வழங்கப்பட்டுள்ளது. இதனைப் பெற்றுக் கொண்ட மாணவன் செல்போன் தட்டிவிடப்பட்ட காட்சியை சமூகவலைதளத்தில் வைரலாக்கிய இளைஞர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

 

 

Trending News