மின்சார வேலி.. எனக்கு மிட்டாய் மாதிரி: அசத்திய யானை, ஃபேன்ஸ் ஆன நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

Viral Elephant Video: யானைக்கு இத்தனை மூளையா என வியக்க வைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. மாஸ்டர் பிளான் போட்டு தப்பித்த யானையை இணையவாசிகள் பாராட்டி வருகிறார்கள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 7, 2022, 07:33 PM IST
  • யானைகள் காட்டின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த விலங்குகளாக கருதப்படுகின்றன.
  • இவை பொதுவாக சாதுவாக இருந்தாலும் மிகவும் புத்திசாலியானவை.
  • யானைகளின் புத்திசாலித்தனம் தொடர்பான பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.
மின்சார வேலி.. எனக்கு மிட்டாய் மாதிரி: அசத்திய யானை, ஃபேன்ஸ் ஆன நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. 

யானைகள் காட்டின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த விலங்குகளாக கருதப்படுகின்றன. இவை பொதுவாக சாதுவாக இருந்தாலும் மிகவும் புத்திசாலியானவை. யானைகளின் புத்திசாலித்தனம் தொடர்பான பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. இணைய உலகில், யானை, குரங்கு, நாய், சிங்கம் ஆகிய விலங்குகளுக்கு மவுசு அதிகம். தற்போதும் யானையின் புத்திக் கூர்மையை எடுத்துக்காட்டும் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகின்றது. 

யானைகளின் வீடியோக்கள் பொதுவாக சமூக ஊடகங்களில் அதிக சலசலப்பை உருவாக்குகின்றன. இவற்றை பற்றிய அனைத்து வீடியோக்களும் வைரல் ஆகின்றன. தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவில், மின்சார கம்பியை சாதுர்யமாக உடைத்துக்கொண்டு யானை ஒன்று சாலையில் வருவதைக் காண முடிகின்றது. மின்சார கம்பியில் மாட்டிக்கொள்ளாமல், வேலியை தாண்டும் போது, யானை சற்றும் அவசரப்படாமல், அற்புதமான புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துவதை வீடியோவில் காண முடிகின்றது. யானை முதலில் மின் வேலியை உடைத்து பின் சாலையைக் கடக்கிறது. இந்த வீடியோ யானையின் புத்திசாலித்தனத்துக்கு ஒரு மிகப்பெரும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. 

மேலும் படிக்க | ஜாலியான ரிடையர்மெண்ட் லைஃப்! வாழ்க்கைக்கு கடிவாளம் போடாதீங்க கொஞ்சும் குதிரைகள் 

யானையின் புத்திக் கூர்மையை காட்டும் மாஸ் வீடியோவை இங்கே காணலாம்: 

வீடியோவில் காணும் யானையின் புத்திசாலித்தனம்

இந்த வைரலான கிளிப்பில், வேலியை தாண்ட வரும் யானை ஒன்று அது மின்சார இரும்பு வேலி என்பதை தெரிந்துகொண்டு அங்கேயே நிற்பதைக் காண முடிகின்றது. ஆனால், அதனால் அச்சம் கொண்டு திரும்பி போகாமல், அது அற்புதமான திட்டத்தை தீட்டுகிறது. தன் புத்திசாலித்தனத்தால் அதை கடந்து செல்கிறது. 

முதலில் அந்த மின் கம்பியை தன் கால்களால் மெதுவாக தொட்டுப் பார்க்கிறது. அந்த கம்பியில் மின்சாரம் உள்ளதா இல்லையா என்பதை யானை உறுதி செய்துகொள்கிறது. பின்னர் அது வேலியில் மின்சாரம் பாயாத பாகத்தில் காலை வைத்து, அதை தகர்த்து, அழகாக கடந்து செல்கிறது. யானையின் புத்துசாலித்தனம் பொங்கும் இந்த செயலை அந்த வழியாக சென்றவர் வீடியோ எடுத்து வைரல் ஆக்கியுள்ளார். இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட லைக்குகளும் வியூஸ்களும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பலவித கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகிறார்கள். 

மேலும் படிக்க | எடுத்தேன் பாரு ஓட்டம்...நபரை ஓடவிட்ட காட்டு யானை: வீடியோ வைரல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News