ராஜீவ் காந்தி நினைவிடத்தில் டிக்டாக் வெளியிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் டிக் டாக் வீடியோ எடுத்து வெளியிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி துரைமுருகன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

Last Updated : Mar 2, 2020, 03:38 PM IST
ராஜீவ் காந்தி நினைவிடத்தில் டிக்டாக் வெளியிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி title=

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் டிக் டாக் வீடியோ எடுத்து வெளியிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி துரைமுருகன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் அணியை சேர்ந்தவர் துரைமுருகன். இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் டிக் டாக் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோவை வெளியிட்ட அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி புகார் அளிக்கப் பட்டு உள்ளது. 

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் உள்ள நபர்களால் அதிகம் பகிரப்பட்டு, மேலும் பல்வேறு கருத்துக்களுக்கு உள்ளாகி உள்ளது. இதனால் சர்ச்சை எழுந்துள்ளது. 

எனவே, இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி துரைமுருகனை, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். 

Trending News