அம்மா! நான் மிகவும் சோர்வடைந்து விட்டேன்.. என்னால் நடக்க முடியாது... கண்களை ஈரமாக்கும் புகைப்படம்

சில ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் ஒரு படத்தைப் பார்த்திருக்க வேண்டும். அதில் சிவப்பு சட்டை அணிந்த குழந்தையின் உடல் கடலில் மிதந்துக் கொண்டிருந்தது. அந்த படம் ஒரு துருக்கிய குழந்தையின் உடையது. இஸ்லாமிய அரசின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக, இந்த மக்கள் படகுகளில் சவாரி செய்து மற்ற நாடுகளை நோக்கி தங்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக தப்பி ஓடி வந்தனர். இரண்டு படகுகளில் மொத்தம் 12 அகதிகள் இருந்தனர். இரண்டு படகுகளும் கடலில் மூழ்கின. வாழ்க்கையைத் தேடிச் சென்றவர்கள் அனைவரும் இறந்தனர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 28, 2020, 09:33 PM IST
அம்மா! நான் மிகவும் சோர்வடைந்து விட்டேன்.. என்னால் நடக்க முடியாது... கண்களை ஈரமாக்கும் புகைப்படம் title=

கோரக்பூர்: ஒரு நகரத்தை உருவாக்க தொழிலாளிகள் இல்லாமல் உருவாக்க முடியாது. நகரத்தில் உள்ள அனைவரின் வீட்டையும் கட்டியவர், இன்று அவர்களுக்கு வீடு இல்லை... இந்த மக்கள் தங்கள் இரத்தம் மற்றும் வியர்வையால் நகரத்தை உருவாக்கினார்கள்', துரதிர்ஷ்டவசமாக, அவர்களுக்காக நகரங்களின் சாலைகளில் எந்த வாகனமும் ஓடவில்லை. அவர்களின் பசியை போக்க, அவர்களை அவர்களின் சொந்த கிராமத்துக்கு அழைத்து செல்ல யாரும் இல்லை. பல ஆயிரம் கிலோமீட்டர் உணவு இல்லாமல் நடந்த படியே செல்கின்றனர். கொரோனாவில் இருந்து தப்பித்துக்கொள்ள சொந்த ஊருக்கு செல்லும் அவர்களை பசி கொன்று விடுமா? என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. 

சில ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் ஒரு படத்தைப் பார்த்திருக்க வேண்டும். அதில் சிவப்பு சட்டை அணிந்த குழந்தையின் உடல் கடலில் மிதந்துக் கொண்டிருந்தது. அந்த படம் ஒரு துருக்கிய குழந்தையின் உடையது. இஸ்லாமிய அரசின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக, இந்த மக்கள் படகுகளில் சவாரி செய்து மற்ற நாடுகளை நோக்கி தங்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக தப்பி ஓடி வந்தனர். இரண்டு படகுகளில் மொத்தம் 12 அகதிகள் இருந்தனர். இரண்டு படகுகளும் கடலில் மூழ்கின. வாழ்க்கையைத் தேடிச் சென்றவர்கள் அனைவரும் இறந்தனர்

அந்த சிறுவனின் படம் பெரிய நாடுகளை தங்கள் கொள்கைகளை மாற்ற கட்டாயப்படுத்தியது. இன்று ஒரு குழந்தை மற்றும் தாயின் படம் இந்தியாவில் இருந்து வந்துள்ளது. ஒரு குழந்தை 80 கிலோமீட்டர் பயணம் செய்து தனது தாயின் காலில் படுத்துக் கொண்டு, அம்மாவிடம் சொல்லியிருக்கலாம் ... இனிமேல் என்னால் நடக்க முடியாது. நான் சோர்ந்து போய்விட்டேன் என்று.... இந்த படம்  சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

இதயத்தில் வலியை ஏற்படுத்தும் பல படங்கள் சமூக ஊடகங்களில் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றைப் பார்க்கும்போது, ​​இதயம் நடுங்குகிறது. அத்தகைய ஒரு படம் ஒரு நாளிதழில் வெளிவந்துள்ளது. இந்த படத்தைப் பார்க்கும்போது, ​​கண்கள் கண்ணீர் வருவதை தடுக்க முடியாது. இந்த படத்தில் ஒரு குழந்தை தனது தாயின் காலில் படுத்துக் கொள்கிறது. கடந்து செல்லும் வாகனங்களைப் பார்த்து குழந்தையின் தாய் உதவி கேட்கிறாள். இந்த நேரத்தில், இந்த தாய் தன்னைப் பற்றி யோசிக்கவில்லை, தனது காலடியில் கிடக்கும் குழந்தைக்கு யாராவது உதவி செய்யலாம், எங்கள் இருவருக்கும் சிறிது தூரம் செல்ல யாராவது உதவலாம் என்று அவள் நினைக்கிறாள்.

வேலையோ பணமோ இல்லை:
இந்த மக்கள் தினசரி கூலிக்கு வெளியே வேலை செய்கிறார்கள். ஊரடங்கு உத்தரவுக்கு பிறகு வேலையும் பணமும் இல்லை. இப்போது இந்த மக்கள் அங்கே தங்கியிருந்தால், ஒருபுறம், கொரோனா வைரஸ் நாடு முழுவதும் தொடர்ந்து அழிவை ஏற்படுத்தி வருகிறது. அதே நேரத்தில் இந்த தொழிலாளர்கள் மீது இரண்டு விதமான பாதிப்பு உள்ளது. ஒன்று கொரோனாவை விட அவர்களுக்கு இருக்கும் வலி அவர்களின் வயிறு. மற்றொன்று தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவது. ஆனால் பசியுள்ள வயிற்றுடன் எவ்வாறு அவர்கள் போராடுவார்கள்.

இந்த படம் கோரக்பூரிலிருந்து வந்தது:
இதன் காரணமாக, இந்த மக்கள் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் தங்கள் வீட்டிற்குத் திரும்பி செல்கிறார்கள். குறைந்தபட்சம் வீட்டில் பணம் தேவைபடாது. உணவு கிடைக்கும். இந்தப் படத்தைப் பார்த்து ஆயிரக்கணக்கான மக்கள் ஈரமான கண்களைக் கொண்டுள்ளனர். தகவல்களின்படி, இந்த படம் வெள்ளிக்கிழமை எடுக்கப்பட்டு உள்ளது. ஒரு தாய் காலனியிலிருந்து தியோரியாவுக்கு நடந்து செல்கிறாள். இந்த தாய் தனது குழந்தைக்காக 80 கி.மீ பயணம் செய்தபின் கோரக்பூரை அடையும் போது, ​​அந்தக் குழந்தை சாலையில் அமர்ந்து, தாயின் கால்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. ஒருவேளை இந்த குழந்தையின் என்ன சொல்ல நினைத்திருக்கும் அல்லது அந்த குழந்தையின் வலி என்னவாக இருந்திருக்கும் என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன். 

டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவும் இந்த படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டு கருத்தை பகிர்ந்துள்ளார். 

 

இடம்பெயர்வு நிறுத்த முயற்சிக்கும் அரசுகள்: 
கொரோனா வைரஸின் அதிகரித்த தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு பூட்டுதல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர், டெல்லியில் தினசரி கூலித் தொழிலாளர்கள் அந்தந்த கிராமங்களுக்குத் திரும்பி வருகின்றனர். இருப்பினும், தொழிலாளர்கள் வெளியேறுவதைத் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களே இதுபோன்றவர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர்களின் உணவு மற்றும் பானங்களுக்கு சாத்தியமான ஒவ்வொரு ஏற்பாடும் செய்யப்படும். டெல்லி அரசு அமைத்த சுமார் 800 மையங்களில் தேவைப்படும் மக்களுக்கு உணவு விநியோகிக்கப்படுகிறது.

4 லட்சம் பேருக்கு உணவு ஏற்பாடு: கெஜ்ரிவால்:
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சனிக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில், 568 பள்ளிகள் மற்றும் 238 தங்குமிடம் வீடுகளில் தினமும் 4 லட்சம் பேருக்கு உணவு ஏற்பாடு செய்து வருகிறது. நிவாரண முகாம் குறித்து முடிந்தவரை பலரிடம் சொல்லவும், அருகிலுள்ள மையத்தை அடைய மக்களுக்கு உதவவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை நாங்கள் செய்துள்ளோம் என்றும் அவர்களிடம் சொல்லுங்கள் என்று மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

568 பள்ளிகளிலும், 238 இரவு தங்குமிடங்களிலும் உணவு ஏற்பாடுகள்:
அரவிந்த் கெஜ்ரிவால், ஒவ்வொரு மாவட்டத்திலும் ரோந்து சென்று தேவைப்படுபவர்களுக்கு உணவுப் பொட்டலங்களை விநியோகித்து வருகிறார். சுமார் 1000 குழுக்கள் சுற்றித் திரிந்து தெருக்களில் உணவு விநியோகிக்கப்படுகின்றன. டெல்லி முழுவதும் ஒரு அறிவிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முதல் விநியோக செயல்முறை சீராக இயங்கும் மற்றும் உணவு எல்லா இடங்களிலும் சென்றடையும். எங்கள் எம்.எல்.ஏ.க்களை தொழிலாளர்களுடன் பேசும்படி கேட்டுள்ளோம். டெல்லியை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று டெல்லி முதல்வர் கூறியுள்ளார்.

Trending News