நீதிமன்ற தடையினை மீறி 2.0-வினை வெளியிட்டது tamil rockers!

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று வெளியான 2.0 திரைப்படத்தினை tamil rockers இணையத்தில் வெளியிட்டுள்ளது!

Updated: Nov 29, 2018, 02:45 PM IST
நீதிமன்ற தடையினை மீறி 2.0-வினை வெளியிட்டது tamil rockers!

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று வெளியான 2.0 திரைப்படத்தினை tamil rockers இணையத்தில் வெளியிட்டுள்ளது!

சமீபத்தில் நடிகர் விஜயின் சர்கார் திரைப்படத்தினை சவால் விட்டு இணையத்தில் வெளியிட்ட Tamil Rockers, தற்போது நடிகர் ரஜினியின் 2.0 திரைப்படத்தினையும் இணையத்தில் வெளியிட்டுள்ளது.

பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள 2.0 திரைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் கடும் கோபம் கொண்டுள்ளனர். 

முன்னதாக கடந்த நவம்பர் 9-ஆம் நாள் 2.0 திரைப்படத்ததினை விரைவில் வெளியிடவுள்ளதாக tamil rockers தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்தது. இதைத்தொடர்ந்து இப்பட தயாரிப்பு நிறுவனம், tamil rockers உள்பட 12,567 இணையதளங்களில் வெளியிட தடைவிதிக்க வேண்டும் என நீதிமன்ற உதவியினை நாடியது.

இதைத்தொடர்ந்து நேற்றைய தினம் 2.0 திரைப்படத்தை tamil rockers  உட்பட 12,567 இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றம் தடை விதித்த போதிலும் தான் சொல்லிய சொல்லை காப்பாற்றும் வகையில் tamil rockers தனது இணையபக்கத்தில் 2.0 திரைப்படத்தினை வெளியிட்டுள்ளனர்.