மார்கழி மாதத்தில் ‘இந்த’ தெய்வத்தை வணங்கினால் பண கஷ்டமே வராதாம்!

Must Worship Lord On Margazhi Month : மார்கழி மாதம், மங்களகரமான விஷயங்கள் நடைப்பெறுவதற்கு ஏதுவான மாதமாகும். இந்த மாத்தில், குறிப்பிட்ட ஒரு தெய்வததை வழிப்பட்டால் பணக்கஷ்டமே வராதாம். அது எந்த தெய்வம் தெரியுமா? 

Written by - Yuvashree | Last Updated : Dec 30, 2024, 07:29 PM IST
  • மார்கழி மாதத்தில் எந்த தெய்வத்தை வழிபடலாம்?
  • பணவரவு அதிகமாக கொடுக்கும் தெய்வம் இது!
  • பெண்கள் செய்ய வேண்டிய 10 விஷயங்கள்..
மார்கழி மாதத்தில் ‘இந்த’ தெய்வத்தை வணங்கினால் பண கஷ்டமே வராதாம்! title=

Must Worship Lord On Margazhi Month : மார்கழி மாதத்தில் தான் குருஷேத்திர போர் நடைபெற்றது என புராணங்கள் சொல்கின்றன. இந்த போரில் வெற்றி பெற்றது பாண்டவர்கள் என கதைகள் சொன்னாலும், உண்மையில் வெற்றி பெற்றது பகவானும், அவன் நிலை நிறுத்த நினைத்த தர்மமும் தான்.  இறைவனின் துணையுடன் நாமும் வாழ்வில் எதிர்கொள்ளும் போராட்டங்களை, பிரச்சனைகளை வெற்றி கொள்ள வேண்டும் என்பதற்காக தான் மார்கழி மாதம் இறை வழிபாட்டிற்குரிய மாதமாக சொல்லப்படுகிறது.

மார்கழி மாதத்தில் வணங்க வேண்டிய தெய்வம்:

மார்கழி மாதம், பொதுவாக விஷ்ணுவிற்கு உகந்த மாதமாக பார்க்கப்படுகிறது. இவர், பாதுகாவலராகவும் கேட்டதை வழங்கும் கடவுளாகவும் பார்க்கப்படுகிறார். அது மட்டுமன்றி, நிதி நிலையில் வரும் நெருக்கடிகளை சமாளிக்கவும் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை எதிர்த்து போராடவும் விஷ்ணுவை வழிபடலாம் எனக்கூறப்படுகிறது. 

 மார்கழி மாதத்தில் ஆண்டாளின் திருப்பாவையை அதிகாலையில் எழுந்து குளித்து பாடினால், நம்மிடம் இருக்கும் செல்வாக்கு இரட்டிப்பாகும் என கூறப்படுகிறது.அதே போல, விஷ்ணுவுக்கு உகந்த வைகுண்ட ஏகாதேசி நாளில் அவரை வழிப்பட்டால் குடும்பம் செல்வ செழிப்பாக இருப்பதுடன் இனி பணக்கஷ்டம் வருவதையும் தவிர்க்கலாம் எனக்கூறப்படுகிறது. இத்துடன் சேர்ந்து குடும்பத்தினரின் மகிழ்ச்சியும் இரட்டிப்பாகுமாம்.  விஷ்ணுவுடன் லக்‌ஷிமியையும் சேர்த்து துதித்து வழிப்பட்டால் செல்வ செழிப்புடன் மகிழ்ச்சியாக இருக்கலாம் எனக்கூறப்படுகிறது. மார்கழி மாதத்தில் லக்‌ஷ்மிக்குரிய இனிப்புகள், பூக்கள் மற்றும் பழங்களை வைத்து தினமும் வழிபடலாம்.

மார்கழி பூஜை விதிகள் :

மார்கழி மாதம் என்பது மிகவும் விசேஷமான மாதமாகும். சூரிய பகவான், குருவின் வீடான தனுசு ராசிக்குள் பயணம் செய்யும் மாதம். அதனால் இது குருவின் ஆதிக்கம் அதிகம் நிறைந்த மாதமாகும்.  வழக்கமாக கோவில்களில் காலையில் திருப்பள்ளி எழுச்சி எனப்படும் சுப்ரபாதம் பாடித் தான் இறைவனை துயில் எழுப்புவார்கள். அருகில் உள்ள கோவில்களில் இந்த பாடல்களை கேட்டு நாமும் கண் விழித்திருப்போம்.  ஆனால் பக்தர்கள் அனைவரும் தேடிச் சென்று, பகவானை புகழ்ந்து பாடி எழுப்பும் மாதம் மார்கழி மாதமாகும்.

Vishnu

மேலும் படிக்க | தனுசில் சூரியன்... மார்கழி மாதத்தில் இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்கள்

மார்கழியில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய 10 விஷயங்கள்:

பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, குளித்து, வாசலில் கோலமிட்டு, பூஜை செய்து விட வேண்டும்.

மார்கழியின் 30 நாட்களும் தினமும் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொள்ள வேண்டும்.

காலையில் எழுந்த உடன் முன் வாசல் கதவை திறந்த பிறகு தான் பின் வாசல் கதவை திறக்க வேண்டும். அப்படி திறக்கும் போதும் கஜலட்சுமி என்ற மந்திரத்தை உச்சரித்தபடி திறக்க வேண்டும்.

வாசலில் சாணம் அல்லது மஞ்சள் நீர் தெளித்து கோலமிட்டு, அதில் செம்பருத்தி பூ வைத்து அலங்கரிக்க வேண்டும்.

காலையில் நிலை வாசலில் 2 தீபங்கள் ஏற்ற வேண்டும். அது நெய் விளக்கோ, நல்லெண்ணெய்யோ, பஞ்சகூட்டு எண்ணெய்யோ அல்லது வழக்கமாக நீங்கள் தீபம் ஏற்ற பயன்படுத்தும் எண்ணெய் கொண்டு விளக்கேற்ற வேண்டும்.

மாலையிலும் நிலைவாசலில் 2 தீபங்கள் ஏற்ற வேண்டும்.

திருமண வயதில் இருக்கும் பெண்கள், திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்கள் மார்கழி மாதம் காலையில் விநாகருக்கு ஒரு குடத்தில் தண்ணீர் எடுத்து அபிஷேகம் செய்ய வேண்டும்.

தினமும் காலையில் திருப்பாவை, திருவெண்பாவை பாசுரங்கள் பாடுவது சிறப்பு. தினமும் கந்தசஷ்டி கவசம் கேட்பதும், படிப்பதும் உயர்ந்த பலனை தரும்.

நம்மால் முடிந்த அளவிற்கு அருகில் உள்ள கோவிலுக்கு மார்கழி மாத பூஜைக்கு கொடுக்கலாம். கோவிலுக்கு தேவையான பூஜை பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம்.

வீட்டில் தினமும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

மேலும் படிக்க | மார்கழி 15 திங்கட்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News