இந்தியாவில் ரயில் போக்குவரத்து கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் நெட்வொர்க். குறைந்த கட்டணத்தில் கிடைக்கும், வசதியான பாதுகாப்பான போக்குவரத்து என்பதால், நீண்ட தூர பயணத்திற்கு சிறந்த தேர்வாக இருப்பது ரயில் போக்குவரத்து. ரயில்வே ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான வசதியையும் வழங்குவதால், வீட்டிலிருந்த படியே டிக்கெட் முன் பதிவு செய்யலாம். IRCTC தளத்தில் தான் பெருமபாலானோர் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். இந்நிலையில், ரயிலில் பயணிக்க கன்பர்ம் டிக்கெட் மட்டும் போதாது. மற்றொரு முக்கியமான ஆவணம் தேவை என்பது உங்களுக்குத் தெரியுமா?
டிக்கெட்டுடன் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய ஆவணம்
ரயில்வே கவுன்டரில் உங்கள் டிக்கெட்டை நீங்கள் வாங்கியிருந்தால், எந்த பிரச்சனையும் இல்லை. ஏனெனில் இதற்கு கூடுதல் ஆவணம் எதுவும் தேவையில்லை. இருப்பினும், நீங்கள் ஆன்லைனில் உங்கள் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தால், பயணத்தின் போது உங்கள் இ-டிக்கெட்டுடன் உங்களுக்கான புகைப்பட ஐடியை எடுத்துச் செல்ல வேண்டியது மிக அவசியம். சரியான அடையாளச் சான்று இல்லை என்றால், இந்திய ரயில்வே ரயில் டிக்கெட் பரிசோதகருக்கு (TTE) அபராதம் விதிக்க அதிகாரம் உள்ளது அல்லது ரயிலில் இருந்து உங்களை நடுவழியில் இறக்கி கூட விடலாம்.
மேலும் படிக்க | ரயில்களில் எந்தெந்த பெட்டிகள் எங்கெங்கு இருக்க வேண்டும்... முழு விவரம்
கன்பர்ம் டிக்கெட் முற்றிலும் செல்லாததாக கருதப்படும்
அடையாள ஆவணங்களில், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் அல்லது உங்கள் புகைப்படம் மற்றும் பெயருடன் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வேறு ஏதேனும் ஐடி உங்களிடம் அவசியம் இருக்க வேண்டும். உங்களிடம் உறுதிப்படுத்தப்பட்ட கன்பர்ம் டிக்கெட் இருந்தாலும், அடையாளச் சான்று இல்லாமல், உங்கள் கன்பர்ம் டிக்கெட் முற்றிலும் செல்லாததாக கருதப்படும். நீங்கள் ஆன்லைனில் ஒரு டிக்கெட்டை முன்பதிவு செய்து, அசல் அடையாளச் சான்றிதழை உங்களுடன் கொண்டு வரவில்லை என்றால், நீங்கள் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததாகக் கருதப்படுவீர்கள் என இந்திய ரயில்வே விதிகள் கூறுகின்றன. அத்தகைய பயணிகளுக்கு அபராதம் விதிக்கவும், அவர்களை ரயிலில் இருந்து இறக்கவும் ரயில்வேக்கு உரிமை உண்டு.
அபராத தொகை விபரம்
உங்களுக்கு விதிக்கப்படும் அபராதம் நீங்கள் பயணிக்கும் வகுப்பைப் பொறுத்தது. முதலில், போர்டிங் பாயிண்டிலிருந்து நீங்கள் சேருமிடத்திற்கான பயணத்திற்கான முழு கட்டணத்தையும் TTE வசூலிப்பார். கூடுதலாக, ஏசி கோச்சில் பயணம் செய்தால் ரூ.440 அபராதமும், ஸ்லீப்பர் கோச்சில் ரூ.220 அபராதமும் விதிக்கப்படும்.
இருக்கை வசதி கிடைக்கும் என்ற உத்திரவாதம் இல்லை
கட்டணம் மற்றும் அபராதம் செலுத்திய பிறகு, உங்களுக்கு இருக்கை வசதி கிடைக்கும் என கூற இயலாது. TTE உங்கள் இ-டிக்கெட்டை ரத்து செய்தவுடன், உங்கள் இருக்கை போய் விடும். டிக்கெட் கட்டணம் மற்றும் அபராதம் செலுத்திய பிறகும், உங்கள் இருக்கை கிடைக்கும் என கூறி விட முடியாது. TTE உங்களுக்கு உடன்படவில்லை என்றால், அவர் உங்களை ரயிலில் இருந்து இறங்கச் சொல்லலாம்.எனவே, ரயில் பயணத்தின் போது உங்கள் அடையாளச் சான்றினை இ-டிக்கெட்டுடன் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள், இதனால் பயணத்தின் போது நீங்கள் சிக்கல்களை சந்திக்காமல் தவிர்க்கலாம்.
மேலும் படிக்க | இந்திய ரயில்வே... இறுதி ரிசர்வேஷன் சார்ட் தயாரிக்கும் நேரத்தில் விரைவில் மாற்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ