சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். இதுபோன்ற ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது.
அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் முஜாமில் என்ற இளைஞருக்கு திருமணம் (Marriage) நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த திருமணம் நடைபெற ஏற்பாடுகள் கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென மணமகன், மணமகள் குடும்பத்தாரிடம் 10 லட்ச ரூபாய் வரதட்சணையாக கொடுத்தால் மட்டுமே திருமணம் நடக்கும் என்று கூறி உள்ளனர்.
ALSO READ | Viral Video: மருதாணியை ரவிக்கையாக அணிந்து அசத்திய மணப்பெண்..!!
இதனால் திடீரென சந்தேகம் அடைந்த மணமகள் வீட்டார் அவருடைய பின்னணியை விசாரித்தனர். அப்போது அவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆனது தெரியவந்துள்ளது. எலும் ஆதாரபூர்வமாக அதன் புகைப்படங்களும் அவர்களிடம் கிடைத்தன. இதனால் கோபம் அடைந்த பெண் வீட்டார் மணமகனை அடித்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்த வீடியோவை (Social Media) இணையதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
Muzzamil Hussain from Ghaziabad beaten by girls side when he demanded 10L dowry for his 3rd Nikkah. pic.twitter.com/lyGEchKL9M
— Wali (@Netaji_bond_) December 18, 2021
இந்த நிலையில் மணமகள் வீட்டார் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மணமகனிடம் விசாரணை செய்து வருகின்றனர். திருமணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் மணமகன் மணமகள் வீட்டார் அடித்துக் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ALSO READ: Viral Video: 24 கேரட் தங்கபாகுபலி Momos; அசத்தும் மும்பை உணவகம்; விலை ₹1299 மட்டுமே..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR