மாரத்தானில் கால் தடுக்கி தவறி விழுந்த அமைச்சர்! வைரலாகும் வீடியோ!

கர்நாடகாவில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த அமைச்சர் ஜி.டி. தேவகவுடா கால் தடுக்கி தவறி விழுந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Updated: Oct 15, 2018, 12:03 PM IST
மாரத்தானில் கால் தடுக்கி தவறி விழுந்த அமைச்சர்! வைரலாகும் வீடியோ!
Pic courtsey: ANI

கர்நாடகாவில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த அமைச்சர் ஜி.டி. தேவகவுடா கால் தடுக்கி தவறி விழுந்த வீடியோ வைரலாகி வருகிறது.

கடந்த 9-ம் தேதி கர்நாடக மாநிலம் மைசூருவில் தசரா விழா தொடங்கியது. இந்த விழாவில் தினமும் பல்வேறு  விதமான போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. 

அந்தவகையில் நேற்று நடைபெற்ற மாரத்தான் போட்டியை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் ஜி.டி.தேவகவுடா தொடங்கி வைத்ததுடன் தாமும் பங்கேற்றார். அப்போது, ஓடிக்கொண்டிருந்த அவர் திடீரென கால் தடுக்கி கீழே விழுந்தார். பின்னர் அருகே இருந்தவர்கள் அவருக்கு கை கொடுத்து எழுப்பினார்கள். இந்த வீடியோ தற்போது இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.