SeePics: மல்யுத்தத்தில் குதித்த பிரபல கிரிக்கெட் வீரர்!

பிரபல மல்யுத்த வீரர் தலிப் சிங் என அழைக்கப்படும் கிரேட் காலி-யுடன், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹார்ம் வெர்ஸ்ட்லிங் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது!

Last Updated : Jun 11, 2018, 05:56 PM IST
SeePics: மல்யுத்தத்தில் குதித்த பிரபல கிரிக்கெட் வீரர்! title=

பிரபல மல்யுத்த வீரர் தலிப் சிங் என அழைக்கப்படும் கிரேட் காலி-யுடன், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹார்ம் வெர்ஸ்ட்லிங் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது!

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாலர் ஹர்பஜன் சிங், சமீபத்தில் மல்யுத்த வீரர் கிரேட் காலியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது இருவரும் நட்புரீதியில் ஹார்ம் வெர்ஸ்ட்லிங் செய்யும் நிகழ்வினை பூமராங் வீடியோவாக வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவினை ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தற்போது விரும்பி பார்க்கும் WWE நிகழ்ச்சில் பங்கேற்று தனக்கென ஒரு அடையாளத்தினை பதித்துக்கொண்டவர் கிரேட் காலி. இவருடன் ஹர்பஜன் மல்யுத்தம் செய்யும் வீடியோ தற்போது இணையத்தை கலக்கி வருகின்றது.

இந்த வீடியோவினை “Panja with great Khali #DalipSinghCWE #bigfella #Awesomeguy #bigman”. எனும் தலைப்பிட்டு ஹர்பஜன் பதிவிட்டுள்ளார்.

மற்றோரு பதிவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்  வீரர் ரித்தேந்தர் சௌதி-யுடன் காலி மல்யுத்தம் செய்யும் நிகழ்வும் பகிர்ந்துள்ளனர். இந்த பதிவில் Guess who won ? Me or @DalipSinghCWE.. don’t forget Referee @harbhajan_singh was on my side  what a day  எனும் தலைப்பிட்ட சௌதி பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவுகளை இணையப்பிரியர்கள் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்!

Trending News