’ஓடியாங்க ஓடியாங்க சோறு போடுறாங்க’ மணி அடிச்சவுடன் பாய்ந்து வரும் கோழிகளின் வைரல் வீடியோ

இரை போடுவதற்காக சமிக்கை கொடுத்தவுடன் கோழிகள் வேகமாக பறந்து ஓடி வரும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 7, 2023, 07:48 PM IST
’ஓடியாங்க ஓடியாங்க சோறு போடுறாங்க’ மணி அடிச்சவுடன் பாய்ந்து வரும் கோழிகளின் வைரல் வீடியோ title=

இந்த உலகில் சாப்பாடு என்று ஒன்று இல்லை என்றால் பெரும்பாலானோர் வேலைக்கே போகமாட்டார்கள்.  சாப்பாடு மட்டும் இலவசமாக கிடைத்துவிட்டால், அதனை உண்டு கொண்டு வாழ்ந்துவிடலாம். அப்படி இருப்பவர்களும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். படத்தில் கூட பல காமெடிகள் உணவு தொடர்பாக வந்திருக்கிறது. செந்தில்கூட ஒரு படத்தில் எந்தெந்த கோயில்களில் எப்போதெல்லாம் உணவு கிடைக்கும் என லிஸ்ட் போட்டு அங்கு சென்று சாப்பிடுவார். மனிதர்களுக்கே இப்படி இருக்கையில் விலங்குகளுக்கு சொல்லவா வேண்டும். 

மேலும் படிக்க | குழந்தையை கொஞ்சும் குரங்குகள், உருகும் நெட்டிசன்ஸ்: மனதை உருக்கும் வைரல் வீடியோ

இரை கிடைக்கும் இடமே சொர்க்கம் என இருந்துவிடும். அதுவும் வீட்டில வளர்க்கும் கோழி உள்ளிட்டவை எல்லாம் எந்த நேரத்தில் இரை கிடைக்கும் என்பதை அறிந்து சரியாக அந்த நேரத்தில் உரிமையாளர்களின் காலை வட்டமடிக்க தொடங்கிவிடும். மேலும், இரைக்காக அவர்கள் கொடுக்கும் சமிக்கையை எல்லாம் நன்கு அறிந்து வைத்திருக்கும். இரைக்கான சமிக்கை கிடைத்தவுடன் எங்கிருந்தாலும் ஜெட் வேகத்தில் ஓடி வந்துவிடும். டிவிட்டரில் வைரலாகியிருக்கும் வீடியோவும் அந்த ரகம் தான். கோழிகளை வளர்க்கும் பெண் ஒருவர் அவற்றுக்கு இரை போடுவதை மணி அடித்து சொல்கிறார்.

அந்த சத்தத்தைக் கேட்ட கோழிகள் அனைத்தும் போருக்கு படையெடுத்து வருவதுபோல் வேகவேகமாக ஓடோடி வருகின்றன. இந்த வீடியோ டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் பெண் மணி அடித்ததும் நூற்றுக் கணக்கான கோழிகள் பறந்தும், ஓடியும் வருகின்றன. @TheFigen_ என்ற பக்கத்தில் பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோவை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு ரசித்துள்ளனர்.

மேலும் படிக்க | 'ஆஹா...செம டேஸ்ட்': பாம்பை உயிரோடு சாப்பிட்ட நபர், ஷாக் ஆன நெட்டிசன்ஸ், வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News