JIO போன் 2 பிளாஷ் விற்பனை....₹ 200 கேஷ்பேக் பற்றிய முழு விவரம்....

நாடுமுழுவதும் ஜியோ போன் 2 பிளாஷ் இன்று விற்பனை.... ரூ.200 கேஷ்பேக் போன்ற தெரிந்து கொள்ள வேண்டிய மற்ற விஷயங்கள்.....

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 25, 2018, 01:42 PM IST
JIO போன் 2 பிளாஷ் விற்பனை....₹ 200 கேஷ்பேக் பற்றிய முழு விவரம்.... title=

நாடுமுழுவதும் ஜியோ போன் 2 பிளாஷ் இன்று விற்பனை.... ரூ.200 கேஷ்பேக் போன்ற தெரிந்து கொள்ள வேண்டிய மற்ற விஷயங்கள்.....

சமீபத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோவின் ஜியோ போன் 2 பிளாஷ் போனை பற்றிய திட்டத்தை அறிவித்திருந்தது. இந்த போன் ஜியோவின் இரண்டாம் ஸ்மார்ட் பியூச்சர் போனான ஜியோ போன் 2-ல் வாட்ஸ்ஆப், பேஸ்புக் உள்ளிட்ட செயலிகளும் இயங்கும் எனவும் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், இந்த போனை பலரும் ஆன்லைனில் புக் செய்து வந்தனர். இதையடுத்து, ஜியோ போன் 2 பிளாஷ் விற்பனை இன்று பிற்பகல் 12 மணியளவில் துவங்கியது. இதனை வாங்க வேண்டும் என்ற வாடிக்கையாளர்கள் jio.com என்ற இணையதளம் சென்று புக் செய்ய வேண்டும். போனை புக் செய்த இரண்டு 5 முதல் 7 நாட்களில் டெலிவரி செய்யப்படும்.

மேலும், இந்த போனில் ரூ.200 கேஷ்பேக் பெறலாம் என்று தெரிவித்திருந்தது. ஜியோ போன் 2-வின் விலை 2,999 ரூபாய். ஆனால், PayTM டிஜிட்டல் வாலெட் மூலம் போனை புக் செய்யும் போது 200 ரூபாய் கேஷ்பேக் சலுகையுடன் 2,799 ரூபாய்க்கு வாங்கலாம். 

JIO போன் 2-ன் ரீசார்ஜ் திட்டங்கள்......

> திட்டம் ஒன்று - ₹ 49.00

> திட்டம் இரண்டு - ₹ 99.00

> திட்டம் மூன்று - ₹ 153.00

Jio Phone 2 flash-ன் சிறப்பு அம்சங்கள்.....

> 2.40-inch display with a 240 X 320 pixels. 

> 4GB internal storage.

> 128GB via a microSD card.

> 512MB of RAM.

> 2-megapixel primary camera.

> 0.3-megapixel front shooter for selfies.

> Wi-Fi, Global Positioning System (GPS).

> Bluetooth, 2000mAh battery. 

Jio Phone 2 flash-ன் செயலிகள்....

> கட்செவி அஞ்சல் (WhatsApp)

> முகநூல் அஞ்சல் (Facebook)

> யூ-டியூப் (YouTube) 

> கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் private messaging app. 

 

Trending News