லாக் அப் அருகே நின்று TikTok வீடியோ எடுத்த பெண் காவலர் வேலை கோவிந்தா..!

லாக் அப் அருகே நின்று பெண் காவலர் எடுத்த டிக் டாக் வீடியோ வைரலானதை அடுத்து அவர் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்!

Last Updated : Jul 25, 2019, 12:35 PM IST
லாக் அப் அருகே நின்று TikTok வீடியோ எடுத்த பெண் காவலர் வேலை கோவிந்தா..! title=

லாக் அப் அருகே நின்று பெண் காவலர் எடுத்த டிக் டாக் வீடியோ வைரலானதை அடுத்து அவர் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்!

குஜராத் மாநிலம் மெஹசானா மாட்டத்தில் உள்ள லங்னாஜ் காவல் நிலையத்தில் அர்பிதா சவுத்ரி என்ற பெண் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் டிக் டாக் செயலியில் பாடல்களுக்கு நடனமாடி அதை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் காவல் நிலையத்தில் இருந்த அவர் சீருடையில் இல்லாமல், லாக் அப் அருகில் நின்று இந்தி பாடலுக்கு ஆடினார். அதோடு அந்த வீடியோவை தனது டிக் டாக் செயலியில் பதிவிட்டார். இதையடுத்து அந்த வீடியோ வைரலானது. இதனை பார்த்த பலரும் காவல் நிலையத்திற்குள் இருக்கும் காவலர் இவ்வாறு நடந்து கொள்ளலாமா என கண்டனங்களை பதிவு செய்தார்கள்.

இந்நிலையில் இந்த விவகாரம் காவல்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து பணி நேரத்தில் சீருடையில் இல்லாமல் இருந்தது, காவல் நிலையத்தில் காவலர்கள் பின்பற்ற வேண்டிய ஒழுக்க நடவடிக்கைகளை பின்பற்றாமல் இருந்த காரணத்திற்காக காவலர் அர்பிதா சவுத்ரியை, சஸ்பெண்ட் செய்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் மஞ்சிதா உத்தரவிட்டுள்ளார்.

 

Trending News