மொட்டை மாடியில் சிறுமி ஆடிய ஆட்டம்.... சான்சே இல்ல: சொக்கிய நெட்டிசன்கள், வீடியோ வைரல்

Funny Dance Video: இப்படி ஒரு அசால்டான நடனத்தையும், அசத்தலான முக பாவத்தையும் நீங்கள் பார்த்திருக்க முடியாது. வீடியோ இணையத்தில் புயலை கிளப்பி வருகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 18, 2023, 10:53 AM IST
  • இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் surbhihirnak_17 என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
  • இதற்கு இதுவரை 10.2 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன.
  • இணையவாசிகள் அந்த சிறுமியை புகழ்ந்து பல வித கமெண்டிகளை அளித்து வருகிறார்கள்.
மொட்டை மாடியில் சிறுமி ஆடிய ஆட்டம்.... சான்சே இல்ல: சொக்கிய நெட்டிசன்கள், வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் குழந்தைகளின் வீடியோக்கள் மற்றும் நடன வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதுவும் குழந்தைகள் நடனமாடும் வீடியோ என்றால் கேட்கவே வேண்டாம். 

நாம் நம்மை மறந்து பார்க்கும், நம்மை மறந்து சிரிக்கும், வியக்கும் பல வீடியோக்கள் தினம் தினம் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. இவற்றில் நடன வீடியோக்களுக்கென தனி இடம் உண்டும். சிறு குழந்தை முதல் முதியவர்கள் வரை அசத்தலாக நடனமாடும் பல வீடியோக்களை நாம் இணையத்தில் பார்த்துள்ளோம். இப்படிப்பட்ட வீடியோக்கள் முதல் பார்வையிலேயே அனைவரின் கவனத்தை ஈர்ப்பதோடு அவர்களின் முகத்தில் சிரிப்பையும் வரவழைக்கிறது. அதுவும் சில வீடியோக்கள், நடன அசைவுகளுக்காக மட்டுமல்லாமல், ஆடுபவரின் அசாத்திய ஆளுமை, எதை பற்றியும் கவலைப்படாத தைரியம் ஆகியவற்றுக்காகவும் பிரபலமாகின்றன. அப்படி ஒரு வீடியோ சமீபத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றது. 

குழந்தைகள் எந்த வித கபடும் சூதும் இல்லாத நல்ல உள்ளங்களை கொண்டவர்கள். இவர்கள் ஒரு வேலையை செய்யும் முன் எதை பற்றியும் கவலைப்படுவதில்லை. மனம் எதை நினைக்கிறதோ அதை செய்து முடிக்கிறார்கள். சமூக ஊடகங்களில் குழந்தைகள், சிறுவர், சிறுமிகளின் பல வீடியோக்கள் தினம் தினம் பகிரப்படுகின்றன. இவை நம் உள்ளங்களை கவரும் வண்ணம் இருக்கின்றன. 

சமீபத்தில் அப்படி ஒரு வீடியோ இணையத்தில் புயலை கிளப்பியுள்ளது. இதில் சிறுமி ஒருவர் தனது அசத்தலான நடனத்தின் மூலம் நடனத்தில் தனக்கு இருக்கும் திறமையையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்துகிறார். இளஞ்சிவப்பு நிற டி-சர்ட் மற்றும் டிராக் பேன்ட் அணிந்த சிறுமி, இந்தி நடிகை மாதுரி தீட்சித்தின் 'ஹம்கோ ஆஜ் கல் ஹை இந்தசார்' என்ற இந்தி பாடலுக்கு நடனமாடுகிறார். 

மேலும் படிக்க | 6 அடி நீள பாம்பை பிடித்து இழுத்து வரும் குட்டிப் பெண்... நடுங்க வைக்கும் வீடியோ!

சிறுமியின் பக்கா நடனத்தை இங்கே காணாலாம்:

முக பாவத்தால் இணையத்தில் புயலை கிளப்பிய சிறுமி

அசத்தலாக நடனமாடும் அந்த சிறுமி, தனது அபாரமான நடனம் மற்றும் வசீகரிக்கும் முக பாவத்தால் காண்பவர்கள் அனைவரையும் தன் பக்கம் ஈர்க்கிறார். இந்த நடன வீடியோ இந்த சிறுமியின் தனித்துவமான திறமைகளையும் இயற்கையான நடன ஆளுமையையும் எடுத்துக் காட்டுகிறது. குழந்தைகளுக்கே உரிய அவரது அப்பாவித்தனம் வீடியோவை இன்னும் கியூட்டாக மாற்றுகிறது. அது அவரது நடனத்தின் வசீகரத்தை அதிகரிக்கிறது. அவரது நடன அசைவுகளில் உள்ள துல்லியம் அவரது வயதுக்கு மிகவும் அபூர்வமானது. மேலும் அவரது எக்ஸ்பிரஷன்கள் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும்  வகையில் உள்ளன. 

அந்த சிறுமியின் நடன அசைவுகளும், முக பாவங்களும் நடனத்தின் மீது அவருக்கு இருக்கும் ஆர்வத்தையும், அவரது லாவகமான திறமையையும் எடுத்துக்காட்டுகின்றன. 

வீடியோ இணையத்தில் வைரல் ஆனது:

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் surbhihirnak_17 என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு இதுவரை 10.2 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் அந்த சிறுமியை புகழ்ந்து பல வித கமெண்டிகளை அளித்து வருகிறார்கள். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | ஒரே நொடியில் பறவையை பதம் பார்த்த பாம்பு; கதி கலங்க வைக்கும் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News