'உங்களால சிரிக்காம இருக்க முடியாது..': டய்பர் போட்ட குரங்குகளின் செம கியூட் வைரல் வீடியோ

Funny Monkey Video: 'அட... இப்படி கூட நடக்குமா?' என வியக்க வைக்கும் குரங்கு வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 18, 2023, 02:33 PM IST
  • குரங்குகள் இணையத்தின் ஹீரோக்கள் என்றே கூறலாம்.
  • குரங்குகள் செய்யும் பல குறும்புகளின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.
  • தற்போதும் ஒரு விசித்திரமான வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.
'உங்களால சிரிக்காம இருக்க முடியாது..': டய்பர் போட்ட குரங்குகளின் செம கியூட் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

குரங்குகள் இணையத்தின் ஹீரோக்கள் என்றே கூறலாம். குரங்குகள் செய்யும் பல குறும்புகளின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. தற்போதும் ஒரு விசித்திரமான வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. 

குரங்குகள் டயப்பர் அணிந்திருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நான்கு குட்டி குரங்குகள் வரிசையில் நின்று ஆடை அணிந்துகொள்ள தங்கள் முறைக்காக காத்திருக்கும் அழகான வீடியோ இணையவாசிகளிடமிருந்து பல விதமான கமெண்டுகளை பெற்றுள்ளது. சிலர் இந்த கிளிப்பை க்யூட் என்று கூறி ரசித்துள்ளனர். ஆனால், அதை குரங்குகளுக்கு செய்யும் கொடுமையாக இன்னும் சிலர் கருதுகின்றனர்.

ஒரு பெண், குட்டி குரங்குக்கு ஆடை அணிவிப்பதையும் மற்ற குரங்குகள் வரிசையில் நின்று தங்கள் முறைக்காக காத்திருப்பதையும் அந்த வீடியோவில் காண முடிகின்றது. அனைத்து குரங்குகளும் தங்கள் ஆடைகளை கையில் வைத்துக்கொண்டு தங்கள் முறைக்காக காத்திருக்கின்றன. சுவாரஸ்யமான வகையில், நான்கு குரங்குகளும் உயரம் வாரியாக வரிசையாக நிற்கின்றன. பெண்ணுக்கு நெருக்கமாக இருக்கும் குரங்கு குட்டையாகவும், வரிசையில் கடைசியாக இருக்கும் குரங்கு மிக உயரமாகவும் இருப்பதை காண முடிகின்றது. 

மேலும் படிக்க | காதலி கொடுத்த இன்ப அதிர்ச்சி: குஷியில் ஷாக் ஆன காதலன், வைரல் வீடியோ!!

மேலும், வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் குரங்கு சற்று பொறுமையிழந்தும் காணப்படுகினது. உடையை அணிய அந்த குரங்கு மிக ஆர்வமாக இருக்க, தன் முறைக்காக காத்திருக்குமாறு பெண் கூறுகிறார். இதற்கிடையில், பெண் குரங்குக்கு ஆடையை அணிய வைப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். பெண் குரங்குகளுக்கு ஆடை அணிவித்துக்கொண்டிருக்கும்போது, நின்று கொண்டிருக்கும் மற்ற குரங்குகளின் ரியாக்ஷன்கள் பார்ப்பதற்கு மிக வேடிக்கையாக உள்ளன. 

குரங்குகளில் சூப்பர் கியூட் வீடியோவை இங்கே காணலாம்: 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amit Sahu (@amit.sahu5065)

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யப்பட்ட உடனேயே வைரலானது. இந்த கிளிப் சமீபத்தில் மார்ச் 6 அன்று இன்ஸ்டாகிராமில் Amit.sahu5065 என்ற பயனரால் வெளியிடப்பட்டது. இதற்கு ஏகப்பட்ட லைக்குகளும் வியூஸ்களும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பலவகையான கமெண்ட்களை அளித்து வருகிறார்கள். 

சிலருக்கு இந்த வீடியோ ஒரு அழகான கியூட்டான வீடியோவாகத் தெரிகிறது. ஆனால், சிலருக்கோ இது குரங்குகளின் சுதந்திரமான வாழ்க்கைக்கு மனிதர்கள் போடும் வேலி போல தோன்றுகிறது. 

மேலும் படிக்க | viral Video: முதலைக்கு சவால் விட்ட முதியவருக்கு நேர்ந்த கதி: நீங்களே பாருங்க..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News