GV நடிப்பில் உருவாகியுள்ள 'ஐங்கரன்' திரைப்படத்தின் teaser வெளியானது!

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஐங்கரன்' திரைப்படதிதன் டீசரினை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார்!

Last Updated : Oct 24, 2018, 06:04 PM IST
GV நடிப்பில் உருவாகியுள்ள 'ஐங்கரன்' திரைப்படத்தின் teaser வெளியானது! title=

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஐங்கரன்' திரைப்படதிதன் டீசரினை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார்!

தமிழ்திரையுலகில் நடிகர், இசையமைப்பாளர் என இரட்டை கப்பல் ஓட்டி வருபவர் ஜி.வி.பிரகாஷ். தொடர்ச்சியாக படங்களில் நடித்து வரும் இவர் தற்போது ஐங்கரன் என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.

ஈட்டி பட இயக்குநர் ரவி அரசு இப்படத்தினை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் மஹிமா நம்பியார், காளி வெங்கட், ஆடுகலம் நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். காமன்மேன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் ராஜா முகமது படத்தொகுப்பாளராகவும், சரவணன் அபிமன்யூ ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார்.

ஐங்கரன் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இப்படத்தின் டீசரினை இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சர்கார் திரைப்பட இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இத்திரைப்படத்தின் டீஸரினை வெளியிட்டுள்ளார்!

Trending News