கௌதம் வாசுதேவ் மேனனின் ஒன்ராகா ஒரிஜினல்ஸ் மூலம், இசை கலைஞர்களின் தனிப்பாடல்களை ஊக்குவிக்கும் முயற்சியாக கடந்த ஜன., 14 ஆம் நாள் "கூவ கூவ" பாடலினை வெளியிட்டனர்.
நெல்லை மண்னின் வட்டார தமிழ் மொழியில் இயற்றப்பட்டுள்ள பாடல் ரசிகர்கள் அனைவரது கவணத்தினையும் ஈர்த்துள்ளது. பெரும் வரவேற்பை பெற்றுள்ள இப்பாடல் தற்போது இணையத்தில் பலராலும் தேடப்பட்டு வரும் பாடலாக உருமாறி வருகிறது.
இயக்குனர் கௌதம் மேனனின் ஒன்ராகா ஒரிஜினல்ஸ் நிறுவனம் மூலம், தனிப்பாடல்களை ஊக்குவிக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளார். அதன் முதல் படியாக இந்து "கூவ கூவ" பாடலினை தற்போது வெளியிட்டுள்ளனர். இப்பாடலினை நடிகர் தனுஷ் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதன் கார்க்கி பாடல் வரிகளில், இயக்குனர் கௌதம் மேனன் இயக்க, பாடகர் சின்னப்பொன்னு இப்பாடலினை பாடியுள்ளார். கார்த்திக் இசையமைத்துள்ளார்!