மீண்டும் "Kiki Challenge"; ஆனால் தற்போது வேற வெர்ஸனில்!

இணையத்தை உலுக்கி வரும் "Kiki Challenge"-ஆல் ஏற்படும் விபரீதத்தினை மனதில் கொண்டு இந்த சவாலினை செய்ய வேண்டாம் என காவல்துறையினர் வேண்டுகோல் விடுத்துள்ளனர்!

Last Updated : Jul 31, 2018, 01:51 PM IST
மீண்டும் "Kiki Challenge"; ஆனால் தற்போது வேற வெர்ஸனில்! title=

இணையத்தை உலுக்கி வரும் "Kiki Challenge"-ஆல் ஏற்படும் விபரீதத்தினை மனதில் கொண்டு இந்த சவாலினை செய்ய வேண்டாம் என காவல்துறையினர் வேண்டுகோல் விடுத்துள்ளனர்!

பிரபல பாப் பாடகர் டார்க்கியின் 'In my feelings' என்னும் பாடல் தொடர்பான சவால்கள் இணைய பிரியர்களை தற்போது சுண்டி இழுத்துள்ளது. பாப் பாடகர் டார்க்கியின் Scorpion என்னும் இசை ஆல்பம் கடந்த மாதம் வெளியானது. இந்த இசை கோப்பில் இடம்பெற்றுள்ள 'In my feelings' என்னும் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்கள் பலரும் தங்கள் வீடியோவினை இணையத்தில் பதிவேற்றி வந்தனர்.

இதனை தொடர்ந்து இந்த பாடலுக்கு தொடர்பாகும் வகையில் "Kiki Challenge" அல்லது "In my feelings challenge" என்னும் பெயரில் இணையத்தில் ரசிகர்கள் புது சவால் ஒன்றினை அறிமுகம் செய்தனர். அதாவது... இந்த பாடலினை வாகனத்தில் ஒலிக்க வைத்துவிட்டு வாகனத்தை விட்டு வெளியே வந்து நடனமாடிக்கொண்டு வானத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்க வேண்டும் என்பது தான்.

இந்த சவாலினை பிரபலங்கள் பலரும் முன்னெடுத்து செய்து வரும் நிலையில், இணைய ரசிகர்கள் சிலர் பழைய பாடல்களுக்கு இந்த Kiki பாடலின் ஒலியினை பின்இணைத்து பரப்பி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சவாலினால் ஏற்படும் விபரீதத்தினை மக்களுக்கு தெரியபடுத்தும் வகையில், நாட்டின் காவல்துறைகள் விழிப்புணர்வு வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்!

Trending News