SARKAR திரைப்படத்தின் அசத்தலான teaser வெளியானது!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படத்தின் அசத்தலான teaser வெளியானது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 19, 2018, 06:01 PM IST
SARKAR திரைப்படத்தின் அசத்தலான teaser வெளியானது! title=

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படத்தின் அசத்தலான teaser வெளியானது!

AR முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'சர்கார்'. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி, யோகி பாபு என பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

துப்பாக்கி, கத்தி திரைப்படத்திற்கு அடுத்து மூன்றாவது முறையாக நடிகர் விஜய் மற்றும் AR முருகதாஸ் இப்படத்தில் இணைந்துள்ளனர். நடிகர் விஜய்-ன் 62-வது திரைப்படமான இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்ற இந்த இசைவெளியீட்டு விழாவில், நடிகர் விஜய் அரசியல் பற்றி தெரிவித்தக் கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாக மாறியது. 

இதையடுத்து, படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த நிலையில், படத்தின் டீசர் விஜயதசமி பண்டிகையான, இன்று (அக்டோபர் 19-ஆம் தேதி) மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் teaser-னை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

Trending News