வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் திருமண வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்திய திருமணங்களில் இரு தரப்பினரும் மணமக்களுக்கு பரிசுகளை வழங்க தவறுவதில்லை. ஒருபுறம், மணமகனின் குடும்பத்தினர் மணமகளுக்கு விலையுயர்ந்த பரிசுகளை வாங்குகிறார்கள், மறுபுறம், மணமகள் தரப்பிலிருந்து ஏற்பாடுகள் பன்மடங்கு பலமாக செய்யப்படுகிறது. தற்காலத்தில் வரதட்சணை கொடுப்பது, வாங்குவது போன்ற பழக்கம் முடிவுக்கு வந்தாலும், தங்கள் திருமண வாழ்க்கை சுமூகமாக செல்ல, மக்கள் தங்கள் மகள்களுக்கு வீட்டிற்குத் தேவையான பொருட்களை கண்டிப்பாக வழங்குகிறார்கள். அதேபோல் மணமகனும் இந்த பரிசுகளை வாங்குவதைத் தவிர்ப்பதில்லை, ஆனால் அனைவரும் ஒரேமாதிரியாக இருப்பது இல்லை. சமீபத்தில், மக்களின் எண்ணம் தவறானது என்பதை நிரூபித்து, மணமகன் ஒருவர் மணிமண்டபத்திலேயே விலைமதிப்பற்ற பரிசை எடுக்க மறுத்தார், அதன் வீடியோ வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | மாப்பிள்ளை போட்ட குத்தாட்டம், பொண்ணு பண்ண வேலைய பாருங்க: வேற லெவல் வைரல் வீடியோ
சமீபத்தில் @classypeepsofpakistan இன்ஸ்டாகிராம் கணக்கில் இந்திய திருமண வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. வீடியோவில் காணப்பட்ட மாப்பிள்ளையின் பெயர் லூதியானாவில் வசிக்கும் ரிஷி பயல்வி, மணமகளின் பெயர் கோமல் ஷர்மா ஆகும்.
மணமகன் விலையுயர்ந்த பரிசை வாங்க மறுத்தார்
வீடியோவில், மணமக்கள் அமர்ந்திருக்கும் மணிமண்டபத்தின் காட்சி தெரிகிறது. அப்போதுதான் ஒரு பெண் மணமகனுக்கு சில விலைமதிப்பற்ற பரிசைக் கொடுக்கிறாள், அதை மணமகன் உடனடியாக எடுக்க மறுக்கிறார். பரிசைப் பார்த்தவுடன் கோபம் கொள்கிறார், இருப்பினும் கோபம் குறைவாகவும், கோபத்தில் அன்பு அதிகமாகவும் இருக்கிறது. பிறகு சொல்கிறார்- 'வாங்ககிக் கொள்ள மாட்டேன், வாங்ககிக் கொள்ள முடியாது என்று கூறுகிறார்', பின்னர் அருகில் அமர்திருந்த மணப்பெண்ணிடம் திரும்பி, தனக்கு வைரம் போன்ற வாழ்க்கைத் துணை கிடைத்துவிட்டதாகச் சொல்கிறார்.
வீடியோ வைரலாகி வருகிறது
இந்த வீடியோ 15 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது, பலர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். சில நொடிகள் கொண்ட இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
மேலும் படிக்க | சீண்டிய சிறுவனை சும்மா விடுமா குரங்கு? வேற லெவல் வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ