பாலியல் புகார் கூறிய லீனா மணிமேகலைக்கு எதிராக திரைப்பட இயக்குனர் சுசிகணேசன், அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்....
சுசிகணேசன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக லீனா மணிமேகலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதை மறுத்த சுசிகணேசன், சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் லீனா மணிமேகலைக்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார்.
அந்த மனுவில் தன் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் எந்த ஒரு அடிப்படை ஆதாரமின்றி பொய்யான புகாரை லீனா மணிமேகலை பதிவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சுய விளம்பரத்திற்காக பரப்பப்பட்டுள்ள புகாரால் தாம் மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் எனவே அவருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.