வெளியானது சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்தின் “தமிழன் பாட்டு”!

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியிருக்கும் ஈஸ்வரன் படத்தின் முதல் சிங்கள் பாடலான “ தமிழன் பாட்டு” வெளியாகியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 14, 2020, 10:38 AM IST
வெளியானது சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்தின் “தமிழன் பாட்டு”! title=

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஈஸ்வரன். இப்படத்திற்காக நடிகர் சிலம்பரசன் கடினமான உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் குறைத்துள்ளார். 

சமீபத்தில் சிம்பு (Simbu) நடித்துள்ள ஈஸ்வரன் (Eeswaran) படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. அதில், சிம்பு பாம்பை கையில் வைத்திருந்தது சர்ச்சையாகி விலங்கு நல வாரியம் கண்டனம் தெரிவித்த நிலையில், அது குறித்து படக்குழு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் ஈஸ்வரன் படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடலாக வெளியாக உள்ள “ தமிழன் பாட்டு” (Thamizhan Pattu) இன்று காலை வெளியாகியுள்ளது. அதேசமயம் இந்த பாடலின் லிரிக் வீடியோ மாலை 4. 50 மணிக்கு வெளியாகும் என்றும் சிலம்பரசன் (Silambarasan TR) தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

 

 

 

இதற்கிடையில் ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்புகளை முடித்த சிலம்பரசன் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தின் வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News