ட்விட்டர் ட்ரண்ட் அடிக்கும் த்ரிஷா-வின் "மோகினி"!

"மோகினி" - த்ரிஷா மற்றும் ஜாக்னி பக்னானி நடிப்பில் உறுவாகிவரும் த்ரில்லர் திரைப்படம்.!

Updated: Dec 19, 2017, 02:20 PM IST
ட்விட்டர் ட்ரண்ட் அடிக்கும் த்ரிஷா-வின் "மோகினி"!
Screen Grab (Twitter)

இன்று மாலை 5 மணியளவில் "மோகினி" திரைப்படத்தின் முக்கிய தகவல் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்!

"மோகினி" - த்ரிஷா மற்றும் ஜாக்னி பக்னானி நடிப்பில் உறுவாகிவரும் த்ரில்லர் திரைப்படம். ரமணா மாதேஷ் இப்படத்தினை இயக்குகிறார். லண்டனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெறவுள்ளது.

பூர்னிமா பாக்கியராஜ், சுரேஷ் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். ப்ரின்ஸ் பிட்சர்ஸ் எஸ்.லக்ட்சுமன குமார் இப்படத்தினை தயாரிக்கின்றார். விவேக் மெர்வின் இப்படத்திற்கு இசையமைக்கின்றார். விரைவில் வெளிவரவிருக்கும் இந்த த்ரில்லர் திரைப்படம் திரிஷா-வுக்கு நல்ல பெயர் வாங்கி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று இப்படத்தின் முக்கிய தகவல் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த தகவலினால் காலை முதல் #Mohini ட்ரண்ட் ஆகி வருகின்றது!