அழகிய மகளுடன் இருக்கும் நிர்மலா சீதாராமனிடம் நெட்டிசன்கள் கோரிக்கை

நிர்மலா சீதாராமன் தனது மகளுடன் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதனை பாராட்டிய நெட்டிசங்கள் நிதியமைச்சரிடம் ஒரு கோரிக்கையை வைத்துள்ளனர்.

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Sep 23, 2019, 06:16 PM IST
அழகிய மகளுடன் இருக்கும் நிர்மலா சீதாராமனிடம் நெட்டிசன்கள் கோரிக்கை
Pic Courtesy : Twitter/Nirmala Sitharaman

புதுடெல்லி: நேற்று அதாவது, செப்டம்பர் 22, 2019 அன்று, "மகள்கள் தினம்" (#DaughtersDay) கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் உள்ள பெற்றோர்கள் தங்கள் மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தையும், மகள்களின் படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொண்டு, அவர்களுக்கு மிகவும் அழகான வரிகள் மூலம் வாழ்த்துக்கூறினார்கள். 

மகள்கள் தினத்தில் சாதாரண பொது மக்கள் மட்டுமல்ல, நாட்டின் மூத்த தலைவர்களும் கூட தங்கள் மகள்களுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துக் கொண்டனர். தங்கள் மகளுக்காக உணர்ச்சிகரமான வாரத்தைகளையும் எழுதினார்கள். அந்த வகையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman), தனது மகள் பரகலா வாங்மாயுடன் இருக்கும் ஒரு படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த படம் மிகவும் பழமையானது. 

இந்தப் படத்தைப் பகிர்ந்துகொண்ட நிர்மலா சீதாராமன், “மகள்களைப் பற்றி நிறைய சொல்லலாம். மகளுடன் பழைய நினைவுகள். அவள் எனக்கு ஒரு நண்பர், ஒரு வழிகாட்டி மற்றும் ஒரு தத்துவஞானி" எனக் கூறியிருந்தார்.

 

ட்விட்டரில் படத்தை ஷேர் செய்த நிர்மலா சீதாராமன் தனது மகளுடன் கழித்த மறக்கமுடியாத தருணங்களைப் பகிர்ந்து கொண்டார். ஆனால் இந்த படத்தை பார்த்த சில ட்விட்டர் வாசிகள், எங்களையும் உங்கள் மகளாக பாருங்கள்.. வருமான வரி தணிக்கை தேதியை நீட்டிப்பு செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்து பதிவிட்டு வருகின்றனர். நிர்மலா சீதாராமனின் இந்த புகைப்படத்தைக் குறித்து பல்வேறு வகையான கருத்துகளை பகிந்து வருகின்றனர்.