Viral video: கச்சா பாதாம் பாடலுக்கு அழகாய் நடனமாடும் குட்டி தேவதை!

யூ ட்யூப் தளத்துக்கு சென்றால், வைரலாகி பெரும் ஹிட் ஆன, கச்சா பாதாம் பாடலுக்கு பல இளைஞர்களும் யுவதிகளும் இந்தப் பாட்டுக்கு ஆடும் காட்சியை நாம் பார்க்கலாம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 14, 2022, 07:40 PM IST
Viral video: கச்சா பாதாம் பாடலுக்கு அழகாய் நடனமாடும் குட்டி தேவதை! title=

பிர்பூம் மாவட்டத்தின் லக்ஷ்மிநாராயண்பூர் பஞ்சாயத்தில் உள்ள குரல்ஜூரி கிராமத்தில் வசிக்கும் புவன் பத்யாகர் தெரு ஓரத்தில் கடலை விற்று நாள் ஒன்றுக்கு ரூ.300 சம்பாதித்து வந்தார். அவரது வாடிக்கையாளர் ஒருவர் வேர்க்கடலை விற்கும் போது ‘கச்சா பாதாம்’ பாடும் வீடியோவை படமாக்கி சமூக ஊடகங்களில் பதிவேற்றியதை அடுத்து இந்த பாடல் இணையத்தில் மிகவும் வைரலானது. 

அவர் பாடிய இந்த பாடல் இணையத்தில் வைரலாகியதுடன் சமூக வலைதளங்களில் வைரலாகிய அந்த வியாபாரியின் பாடல் வரியையே அடிப்படையாக கொண்டு கச்சா பாதம் என்ற ஆல்பம் சாங்கும் உருவாக்கப்பட்டு வெளியாகி மாபெரும் வைரலானது.

யூ ட்யூப் தளத்துக்கு சென்றால், வைரலாகி பெரும் ஹிட்  ஆன, கச்சா பாதாம் பாடலுக்கு பல இளைஞர்களும் யுவதிகளும் இந்தப் பாட்டுக்கு ஆடும் காட்சியை நாம் பார்க்கலாம். பாடலின் மெட்டும் குரலும் ஒருவகை உள்ளார்ந்த ஈர்ப்பை நம் மக்களுக்கு கிளர்ந்தெழ வைத்திருக்கிறது. 

வைரலான கச்சா பாதம் இணையம் முழுவதும் ஆக்கிரமித்துள்ள நிலையில், தற்போது அந்த பாடலுக்கு நடனம் ஆடியுள்ள ஒரு சிறுமி, தற்போது இணையத்தை கலக்கி வருகிறார்.  தனது அட்டகாசமான நடனம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். 

மேலும் படிக்க | உலகை கலக்கி வரும் கச்சா பாதாம் பாடல்; கண்ணமாவின் வைரல் டான்ஸ்

வைரலான கச்சா பாதம் பாடலுக்கு சிறுமி நடனமாடுவதை இங்கே காணலாம்:

ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் ஷரண் பகிர்ந்துள்ள வீடியோவில், ஒரு சிறுமி பள்ளி சீருடையில் நடனமாடுவதை காணலாம். அழகிய அசைவுகள் மற்றும் முக பாவனைகள் மூலம் சிறுமி நடனமாடுவதைக் காணலாம். 

மேலும் படிக்க | Florida: சாலையில் ‘ஓணான்கள்’ மழை; பதற்றத்தில் மக்கள்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News