இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி அவர்களின் மகள் ஸிவா டோனி தான், இந்திய சமூக ஊடகவியலாளர்களின் தற்போதைய செல்லக்குட்டி!
இரண்டு வயதான அவர், சமீப காலமாக தனது Instagram பக்கத்தின் பதிவுகள் மூலம் நெட்டிசன்களின் மத்தியில் தனக்கென ஒரு இடத்தினை பிடித்துள்ளார்.
அந்த இடத்திற்கு அவர் பொருத்தமானவரும் கூட என்பதை நிறுபிக்கும் வகையினில் அவரது சமீபத்திய வீடியோ பதிவு ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அந்த வீடியோவில் அவர், "கனிகனம் நேரம் கமலா நெட்ரான்" எனும் கிருஷ்ணர் பாடல் ஒன்றினை மலையாள மொழியில் பாடி அனைவரது உள்ளங்களையும் கவர்ந்துள்ளார்!