சில பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன, ஆனந்த் மஹிந்திரா அவற்றில் சிறந்த பதிவுகளை தொழிலதிபர் ரீட்வீட் செய்கிறார். அனைவரும் பார்க்க விரும்பும் அவரது பதிவுகளில் இந்த வீடியோ கண்களில் நீரை வரவழைக்கிறது.
தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா சமீபத்தில் தனது டிவிட்டர் கணக்கில் பதிவிட்ட வீடியோ உணர்ச்சிகரமானது என்றாலும் பெரியவர்களுக்கும் தன்னம்பிக்கை அளிக்கும் வீடியோ.
இந்த வீடியோவைப் பார்த்த ஆனந்த் மஹிந்திராவின் இதயம் உருகியது, மேலும் அமிர்தசரஸ் வரும்போதெல்லாம், கண்டிப்பாக இந்த குழந்தைகள் நடத்தும் உணவகத்திற்குச் செல்வதாகவும், அனைவரும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் பகிரங்கமாக கேட்டுக் கொண்டார்.
ALSO READ |இவ்ளோ அழகான மணமகளா? திருஷ்டி சுத்திப்போடுங்க!
கடந்த வியாழக்கிழமை, அமிர்தசரஸ் வாக்கிங் டூர்ஸ் என்ற யூடியூப் சேனலில் ஒரு வீடியோ பதிவேற்றப்பட்டது. அமிர்தசரஸில் டாப் கிரில் என்ற உணவகத்தை நடத்தி வரும் 17 வயது ஜஷந்தீப் சிங் மற்றும் 11 வயது அன்ஷ்தீப் சிங் ஆகியோரின் கதையை இந்த வீடியோ சொல்கிறது.
இந்த இரண்டு குழந்தைகள் தங்கள் தந்தையின் உணவகத்தை நடத்துகிறார்கள். இரண்டு குழந்தைகளின் தந்தை சில மாதங்களுக்கு முன்பு தான் இந்த உணவகத்தைத் தொடங்கினார்.
ஆனால் அவர் 26 டிசம்பர் 2021 அன்று இறந்தார். தற்போது குழந்தைகள் இருவரும் சேர்ந்து உணவகம் நடத்தி வருகின்றனர்.குடும்பத்தின் மொத்த சுமையையும் தங்கள் தோளில் சுமக்கும் இந்த சிறுவர்கள், வாடகை செலுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர்.
வீடியோவின் முடிவில், இந்த உணவகத்திற்கு வருமாறு சிறுவர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள்.
11 வயது சிறுவனின் குரலைக் கேட்ட ஆனந்த் மஹிந்திரா மனதைத் தொடும் இந்த வீடியோவை பகிர்ந்து, 'இந்தக் குழந்தைகள் நான் பார்த்த புத்திசாலி மனிதர்களில் முக்கியமானவர்கள்.நான் அநத ஹோட்டலின் வாடிக்கையாளர்களின் வரிசையில் இருப்பேன் '.
These kids are amongst the pluckiest I’ve seen anywhere. May they soon have lines of people waiting to get in to the restaurant. I love Amritsar & usually look forward to the world’s best Jalebis in the city, but I’m going to add this place to my food binge when I’m next in town. pic.twitter.com/J4i3IPW3IO
— anand mahindra (@anandmahindra) February 5, 2022
'எனக்கு அமிர்தசரஸ் மிகவும் பிடிக்கும், மேலும் உலகின் சுவையான ஜிலேபியை சாப்பிடுவதற்காக அடிக்கடி இந்த நகரத்திற்கு செல்வேன், இப்போது இந்த உணவகமும் எனது பட்டியலில் சேர்ந்துவிட்டது. அடுத்த முறை இந்த நகரத்திற்கு வரும்போது இங்கு கண்டிப்பாக சாப்பிடுவேன் ' என்று பதிவிட்டுள்ளார் ஆனந்த் மஹிந்திரா.
இந்த வீடியோவை இதுவரை சுமார் ஒன்றரை லட்சம் பேர் பார்த்திருக்கின்றனர். இந்த சிறுவர்கள் இருவரும் தினசரி 25 கிலோமீட்டர் பயணித்து வந்து கடையை நடத்துகின்றனர்.
ஆனந்த் மஹிந்திராவின் இந்த ட்வீட்டால் #BabaKaDhaba ட்விட்டரில் அதிகம் ட்ரெண்டானது. கொரோனா காலத்தில் டெல்லியில் 'பாபா கா தாபா' மிகவும் பிரபலமானது நினைவிருக்கலாம்.
ALSO READ | Puppies Cute Video: கடும் குளிரில் நாய் குட்டிகள் குளிர் காய ‘தீ’ மூட்டிய கருணை மனம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR