பலரது வீட்டிலும் நாய், பூனை,முயல், கிளி போன்ற பலவகையான விலங்கினங்களை செல்ல பிராணிகளாக வளர்க்க தொடங்கிவிட்டனர். பெரும்பாலான மனிதர்கள் அவர்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளை விலங்கினமாக கருதாமல் வீட்டிலுள்ள சக உறுப்பினர்கள் போலவே பாவித்து வருகின்றனர். அப்படி நாம் வளர்க்கும் விலங்குகள் நம்மிடம் நன்றாக பழகும், சிலரை தூக்கத்திலிருந்து எழுப்பும் அலாரமாக கூட நாம் வளர்க்கும் செல்ல பிராணிகள் இருக்கின்றனர். நாம் வளர்க்கும் சிறிய பிராணிகள் அவற்றின் பிஞ்சு பாதங்களால் நம்மை மெதுவாக தட்டி எழுப்பும், நம் மீது விழுந்து விளையாடும் அது சாதாரணமான ஒன்று, ஆனால் உருவத்தில் பெரிய யானை வந்து நம்மை தூக்கத்திலிருந்து எழுப்பும்போது நமக்கு எப்படி இருக்கும். அதுபோன்ற ஒரு தருணத்தை தான் இங்கு ஒரு பெண் உணர்ந்து இருக்கிறார், அந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | Viral Video: ரோபோவுடன் சிறுவன் விளையாடிய CHESS; தவறுக்கு கை விரலை முறித்த ROBOT
தாய்லாந்தில் அதிகளவில் யானை இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான், தாய்லாந்தில் சியாங்க்மய் என்கிற பகுதியில் ஒரு சொகுசு விடுதி செயல்பட்டு வருகிறது. அங்கு ஒரு அறையில் பெண் ஒருவர் தூங்கிக்கொண்டு இருக்கிறார், அவரை ஜன்னல் வழியாக ஒரு யானை வந்து அதன் தும்பிக்கை மூலமாக எழுப்பிவிடுகிறது. நமக்கு பார்ப்பதற்கு பயமாக தெரிந்தாலும் அந்த பெண் மிக சாதாரணமாக அதனை எடுத்துக்கொள்கிறார். ஸாக்ஷி ஜெய்ன் எனும் பெயர் கொண்ட அந்த பெண் இதனை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இதுகுறித்து அவர் தனது வலைதள பக்கத்தில் கூறுகையில், இந்த விடுதியில் அலாரமாக யானைகளை கொண்டு விருந்தினர்களை எழுப்பிவிட செய்கின்றனர். இங்கு யானைகளுடன் நீங்கள் விளையாடலாம், சாப்பாடு கொடுக்கலாம், நடக்கலாம், குளிக்கலாம் உங்களுக்கு விருப்பப்படி இருக்கலாம். இது ஒரு வித்தியசமான அனுபவமாக இருந்தது, அடுத்த முறை நீங்கள் தாய்லாந்து வந்தால் சியாங்க்மய் வந்து பாருங்கள் என்று கூறியுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிட்டுள்ள இந்த வீடியோவிற்கு இதுவரை இருபத்தி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்து வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ஒருவர் அந்த இடத்தில நான் இருந்திருந்தால் இந்நேரம் பயந்து சத்தம் போட்டு அந்த இடத்தை விட்டு ஓடியிருப்பேன் என்று கமெண்ட் செய்துள்ளார், மற்றொருவர் அருமை என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க | Viral Video: வெள்ளத்தில் சிக்கிய நூற்றுக்கணக்கான மாடுகள் - கரைசேர்த்த மீனவர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ