இணையத்தில் வைரலாகும் சுரேஷ் ரெய்னா-வின் புதிய பாடல் -வீடியோ!

இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு 20 ஓவர் தொடரில் விளையாடி வரும் சுரேஷ் ரெய்னா அங்குள்ள இசைக்குழுவுடன் இணைந்து பாடல் பாடிய காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Updated: Mar 13, 2018, 01:08 PM IST
இணையத்தில் வைரலாகும் சுரேஷ் ரெய்னா-வின் புதிய பாடல் -வீடியோ!
Pic Courtesy : BCCI

நிதாஹஸ் கோப்பைக்கான முத்தரப்பு டி20 தொடர் இலங்கையில் நடந்து வருகிறது. இதில், தோனி, கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ரோஹித் சர்மா தலைமையில் இளம் வீரர்கள் அதிகம் உள்ள அணியாக இந்தியா இத்தொடரில் பங்கேற்றுள்ளது.

இதையடுத்து, இந்திய வீரர்கள் நேற்று ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, அங்கிருந்த இசைக்குழு பாலிவுட் பாடல்களை பாடிக்கொண்டிருந்தது. அப்போது அவர்களுடன் சேர்ந்து இந்திய வீரர் சுரேஷ் ரெய்னாவும் பாடத் தொடங்கினார். 

பாலிவுட் சிங்கர் கிஷோர் குமாரின் கிளாசிக் பாடல் ஒன்றை பாடி சக வீரர்களை மகிழ்வித்தார். 1.55 நிமிடம் ஓடும் இந்த வீடியோவை பி.சி.சி.ஐ தற்போது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ரெய்னா ஓர் இசைப்பிரியர் என்பது அவரது ரசிகர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். 

இதற்கு முன்னர், "மீருதியா கேங்க்ஸ்டர்ஸ்" என்ற பாலிவுட் படத்தில் ரெய்னா ஒரு பாடல் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ உங்களுக்காக அந்த வீடியோ...! 

 

 

Video Courtesy : News 50