Viral Video: திருமணம் என்றாலே குதூகலம் தான். நம்மில் பலர் பல திருமண விழாக்களில் கலந்து கொண்டுள்ளோம். இதில் அடம்பரமாக நடக்கும் ஒவ்வொரு திருமணத்திலும் தனித்துவமான ஃபேஷன் கடைபிடிக்கப்படுகிறது என்று சொல்லத் தேவையில்லை. இது போல ஒன்று தான் இந்த -பிளௌஸ் மெஹந்தி. ஆம், மெஹந்தி ரவிக்கை. இதில் ரவிக்கை அணியாமல், மருதானியை ரவிக்கை போல் இட்டுக் கொண்டு மணப்பெண் வலம் வரும் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, மெஹந்தி கலை, அதாவது மருதாணி என்பது கை மற்றும் கால்களில் மட்டுமே இடப்பட்டு கொண்டு இருந்தது, ஆனால் காலம் மாறி வருகிறது. ஒரு மணப்பெண் சமீபத்தில் தனது தைரியமான பேஷன் தேர்வுக்காக வைரலானார். அதில் அவர் பாரம்பரிய ரவிக்கையைத் தவிர்த்துவிட்டு அதற்கு பதிலாக மருதாணி இட்டுக் கொண்டார். அது பார்ப்பதற்கு ரவிக்கை அணிந்தது போல் உள்ளது.
ALSO READ | சுட்டிக் குழந்தையின் Viral Video: வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது இது தானோ...!
அந்த வீடியோவில், அந்தப் பெண் ரவிக்கை அணிவதற்குப் பதிலாக தனது உடலின் மேற்பகுதியில் மெஹந்தி டிசைனை வரைந்து, பாரம்பரியமான வெள்ளைச் சேலையை அணிந்துள்ளார். ரவிக்கை போல தோற்றமளிக்கும் வகையில் அழகாக மெஹந்தி, தோள்கள் மற்றும் முன்கைகளுக்கு மேல், நேர்த்தியான, நூட்பமான முறையில் வரையப்பட்டுள்ளது.
வீடியோவை இங்கே பாருங்கள்:
இந்த வீடியோ 1800க்கும் மேற்பட்ட லைக்குகள் மற்றும் பல கருத்துகளுடன் வைரலாகியுள்ளது. பலர் வழக்கத்திற்கு மாறான தோற்றத்தை விரும்பினாலும், மற்றவர்கள் இது அவ்வளவு சிறப்பாக இல்லை என கூறியுள்ளனர். சிலர் ஆச்சரியப்பட்டனர். ஒரு பயனர் நகைச்சுவையாக, 'ரவிக்கை தைக்க ஆகும் செலவை இப்படியும் சேமிக்கலாம்" என்று பதிவிட்டுள்ளார்.
ALSO READ | Viral Video: வரலாற்று சாதனை! பனிபடர்ந்த அண்டார்டிகாவில், தறையிறங்கிய விமானம்
இது ஒரு தைரியமான பேஷன் தேர்வு என்றாலும், நவீன வயது மணப்பெண்கள் பாரம்பரிய மற்றும் நவநாகரீக தோற்றத்தை பெற இந்த முறையை பின்பற்ற பரிசோதிக்கலாம்.
இதை நீங்களும் முயற்சிக்க விரும்புகிறீர்களா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR