Video: 'களரி' திரைப்படத்தின் 'யாரது' பாடல் வெளியானது!

நடிகர் கிருஷ்ணா நடிப்பில் உறுவாகி வரும் களரி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “யாரது” பாடலினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

Last Updated : Aug 28, 2018, 01:58 PM IST
Video: 'களரி' திரைப்படத்தின் 'யாரது' பாடல் வெளியானது! title=

நடிகர் கிருஷ்ணா நடிப்பில் உறுவாகி வரும் களரி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “யாரது” பாடலினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

நடிகர் கிருஷ்ணா நடித்து வெளிவரவிருக்கும் புதிய திரைப்படம் புதிய களரி. கிருஷ்ணா, வித்யா ப்ரதீப், சென்றாயன், எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தை கிரண் சந்த் என்பவர் இயக்கியுள்ளார். மேலும், குருதேவ் ஒளிப்பதிவு செய்ய பிரசன்னா இசையமைத்துள்ளார். 

கேரளாவில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், அனைத்து விஷயத்திற்கும் பயப்படும் கதாபாத்திரத்தில் கிருஷ்ணா நடித்துள்ளார். 

செனித் கெலோத் தயாரித்துள்ள இந்தப்  படத்தின் டீசர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள யாரது பாடலினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Trending News