குரு உச்சத்தால் அபூர்வ ராஜயோகம்.. இந்த ராசிகளுக்கு பொற்காலம், கோடீஸ்வர யோகம்

Grah Gochar October 2023: பண்டிகைகள் நிறைந்த இந்த மாதம் அனைத்து மக்களுக்கும் மிகவும் மங்களகரமானதாக உள்ளது. இம்மாத இறுதியில் கஜகேசரி ராஜயோகம் உருவாகி வருவதால் 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 25, 2023, 07:41 AM IST
  • உத்தியோகத்தில் புதிய பொறுப்பும் கிடைக்கலாம்.
  • குடும்பத்துடன் எங்காவது வெளியே செல்ல திட்டமிடலாம்.
  • பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.
குரு உச்சத்தால் அபூர்வ ராஜயோகம்.. இந்த ராசிகளுக்கு பொற்காலம், கோடீஸ்வர யோகம் title=

கஜ்கேசரி ராஜயோகம் கிரகப் பெயர்ச்சி அக்டோபர் 2023: வேத சாஸ்திரங்களின்படி, அனைத்து நவக்கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தங்கள் ராசிகளை அவ்வபோது மாற்றிக்கொண்டே தான் இருக்கும். இப்படிச் செய்வதால் 12 ராசிகளுக்கும் சில சமயங்களில் சுப யோகங்களும், சில சமயம் அசுப யோகங்களையும் உருவாகும். அந்த வகையில் தற்போது சந்திரனும் குருவும் இணைந்து கஜகேசரி ராஜயோகத்தை உருவாக்குகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், சந்திரன் அக்டோபர் 28 ஆம் தேதி மேஷ ராசியில் நுழைகிறார். இந்த ராசியில் ஏற்கனவே குரு பெயர்ச்சி அடைந்து பயணித்து வருகிறார். இதன் மூலம் வரும் அக்டோபர் 28 ஆம் தேதி முதல் குரு பகவானுடன் மற்றும் சந்திர ஒன்றாக மேஷ ராசியில் இணைந்து அரிய ராஜயோகத்தை உருவாக்குகின்றனர். அதுமட்டுமின்றி இந்த சேர்க்கை வரும் அக்டோபர் 30 வரை நீடிக்கும். மேலும் இந்த அரிய ராஜயோகம் ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதேபோல் இந்த சஞ்சாரத்தால், மூன்று ராசிக்காரர்களுக்கு மட்டும் தொழில் உட்பட அனைத்து துறைகளிலும் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள். இந்நிலையில் கஜ்கேசரி ராஜயோகத்தால் அதிர்ஷ்ட யோகத்தை பெறப்போக்கும் அந்த ராசிகள் எவை என்பதை இந்த கட்டுரையில் விரிவாகத் தெரிந்து கொள்வோம்.

கஜகேசரி ராஜயோகத்தின் பலன் எந்த ராசிக்காரர்களுக்கு என்று பார்போம் (Effects of Gajkesri Rajyog)

கடக ராசி (Cancer Zodiac Sign): இந்த ராசிக்காரர்கள் கஜ்கேசரி ராஜயோகத்தின் (Effects of Gajkesri Rajyog) பலன்களால் வேலையில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். கடக ராசிக்காரர்கள் பல புதிய சலுகைகளைப் பெறலாம். மேலும் உங்கள் தொழிலை விரிவுபடுத்தலாம். வேலை மாற்ற நினைப்பவர்களுக்கு புதிய சலுகை கடிதங்கள் வரலாம். உத்தியோகத்தில் புதிய பொறுப்பும் கிடைக்கலாம்.

மேலும் படிக்க | ராகு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகள் மீது பண மழை.... வெற்றியின் உச்சம் தொடுவார்கள்

மிதுன ராசி (Gemini Zodiac Sign): இந்த அரிய அபூர்வ ராஜயோகம் (Effects of Gajkesri Rajyog) மிதுன ராசிக்காரர்களின் நிதி முன்னேற்றத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். இதனால் உங்கள் வருமானம் வெகுவாக அதிகரிக்கும். இது தவிர, உங்கள் வருமானத்திற்கான பல புதிய ஆதாரங்கள் உருவாக்கப்படும். உங்கள் பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தைப் பெறலாம். குடும்பத்துடன் எங்காவது வெளியே செல்ல திட்டமிடலாம். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.

மேஷ ராசி (Aries Zodiac Sign): கஜ்கேசரி ராஜயோகம்  (Effects of Gajkesri Rajyog) விளைவுகளின் உருவாக்கம் உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரும். இது உங்கள் வீட்டிற்கு செல்வத்தையும் செழிப்பையும் கொண்டு வருவது மட்டுமல்லாமல், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் நீங்கள் பெறுவீர்கள். ஒவ்வொரு திட்டத்திலும் வெற்றி பெறுவீர்கள். முழு நம்பிக்கையுடன் இருப்பீர்கள். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.) 

மேலும் படிக்க | சனி, சுக்கிரன் அருளால் இந்த ராசிகளுக்கு பொற்காலம்: லட்சுமி அன்னையின் அருள் கிடைக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News