ராகு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகள் மீது பண மழை.... வெற்றியின் உச்சம் தொடுவார்கள்

Rahu Peyarchi: ராகு பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு நல்ல துவக்கத்தைத் தரும். இந்த ராசிக்காரர்களுக்கு அறிவு, செல்வம் என அனைத்திலும் வளர்ச்சி இருக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 24, 2023, 02:10 PM IST
  • துலா ராசிக்காரர்களுக்கு ராகு மாற்றம் நல்ல துவக்கத்தை தரும்.
  • இந்த காலத்தில் நீங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத நன்மைகளை பெறுவீர்கள்.
  • உங்கள் கடின உழைப்பு மட்டுமே உங்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும்.
ராகு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகள் மீது பண மழை.... வெற்றியின் உச்சம் தொடுவார்கள் title=

ராகு பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிட சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. இந்த மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சில ராசிகளில் இது சுப பலன்களையும் சில ராசிகளில் அசுப விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன. 

ராகு கேது ஆகியவை நிழல் கிரகங்கள் என அழைக்கப்படுகின்றன. இவை எப்போதும் வக்ர நிலையில் அதாவது தலைகீழ் இயக்கத்தில் பயணிக்கின்றன. ராகுவும் கேதுவும் 18 மாதங்களுக்கு ஒரு முறை ராசியை மாற்றுகின்றன. தற்போது ராகு மேஷ ராசியில் இருக்கிறார். அவர் 30 அக்டோபர் 2023 அன்று மீன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். மீனத்தின் அதிபதி கிரகம் வியாழன். ராகு அக்டோபர் 30 மதியம் வியாழனின் ராசியான மீனத்தில் நுழைகிறார். ஜோதிட சாஸ்திரத்தின் படி, ராகு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளுக்கு இந்த பெயர்ச்சி மிக அதிகமான நற்பலன்களை கொண்டு வரும். ராகுவின் மாற்றம் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல துவக்கத்தைத் தரும். இந்த ராசிக்காரர்களுக்கு அறிவு, செல்வம் என அனைத்திலும் வளர்ச்சி இருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

ராகு பெயர்ச்சியால் உச்சம் தொடவுள்ள ராசிகள்

துலா ராசி (Libra)

துலா ராசிக்காரர்களுக்கு ராகு மாற்றம் நல்ல துவக்கத்தை தரும். இந்த காலத்தில் நீங்கள் உங்கள் கடின உழைப்பை அதிகரித்தால் நினைத்துக்கூட பார்க்க முடியாத நன்மைகளை பெறுவீர்கள். உங்கள் கடின உழைப்பு மட்டுமே உங்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும். ராகுவின் ராசி மாற்றம் வெற்றியுடன் சவால்களையும் கொடுக்கும், எனவே மன நிலையை சீராக வைத்திருக்க வேண்டும். நோய்வாய்ப்பட்ட ஒருவருக்கு உதவ உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், அந்த வாய்ப்பை விட்டுவிடாதீர்கள். நீங்கள் உங்கள் எதிரிகள் மீது வெற்றி காண்பீர்கள். நீதிமன்றம் தொடர்பான விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். இந்த நேரத்தில் பொருளாதார நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். அனைத்து விததமான பிரச்சனைகளும் தீர்ந்து வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்லும்.

மேலும் படிக்க | புத்தாண்டு ராசிபலன் 2024: வரும் ஆண்டில் கஷ்டப்பட போகும் ராசிக்காரர்கள்

விருச்சிக ராசி (Scorpio) 

விருச்சிக ராசிக்காரர்களுக்கு ராகு பெயர்ச்சி பல வகையான பலன்களைத் தரும். இந்த ராசிக்காரர்களுக்கு அறிவு மற்றும் செல்வத்தில் வளர்ச்சி இருக்கும். இந்த காலத்தில் நீங்கள் மனதளவில் மிகவும் சமநிலையுடன் இருப்பீர்கள். எந்த பிரச்சனையும் உங்களை தொந்தரவு செய்யாது. மனைவியுடன் மனக்கசப்பை தவிர்க்க வேண்டும். உங்கள் குழந்தைகளின் கெட்ட சகவாசத்தை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள். உங்கள் பிள்ளைக்கு நேரம் ஒதுக்குங்கள். அவரது வாழ்க்கையை மேம்படுத்த அவரை ஊக்குவிக்கவும். இந்த காலத்தில் நீங்கள் சொந்தமாக பெரிய முடிவுகளை எடுப்பீர்கள். இப்போது எடுக்கப்படும் முடிவுகளால் எதிர்காலத்தில் சாதகமான நன்மைகள் நடக்கும். 

தனுசு ராசி (Sagittarius)

தனுசு ராசிக்காரர்கள் இந்த காலத்தில் வேலைக்கும் குடும்பத்திற்கும் இடையில் சமநிலையை பராமரிக்க வேண்டும். இல்லையெனில், குடும்ப வாழ்க்கையில் பதற்றம் ஏற்படலாம். அலுவலக பணிகளில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில் அதிகமான மகிழ்ச்சி இருக்கும். உங்கள் சமூக வட்டத்தை அதிகரிக்க வாய்ப்பு கிடைக்கும். உங்கள் தாயின் உடல்நிலையை கவனித்துக் கொள்ளுங்கள், அவர் நீண்ட காலமாக ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அவரது சிகிச்சையில் அலட்சியம் இருக்கக்கூடாது. குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

மேலும் படிக்க | தீபாவளிக்கு முன் சனி உச்சம்.. இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News