FIBA ஆசிய கோப்பை கூடைப்பந்து போட்டிகள் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இலவசமாக பார்க்கலாம்

Aadhav Arjuna, Basket Ball | சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வரும் 22 மற்றும் 25 ஆம் தேதி நடைபெறும் FIBA ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதிச்சுற்று போட்டிகளை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம்.

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 20, 2024, 11:25 AM IST
  • சென்னையில் கூடைப்பந்தாட்ட போட்டிகள்
  • நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது
  • பொதுமக்கள் இலவசமாக பார்த்து ரசிக்க அனுமதி
FIBA ஆசிய கோப்பை கூடைப்பந்து  போட்டிகள் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இலவசமாக பார்க்கலாம் title=

Aadhav Arjuna, Basket Ball | FIBA ஆசிய கோப்பை தொடரானது அடுத்த ஆண்டு (2025) நடைபெறவுள்ளது. இந்த தொடரில் விளையாடக்கூடிய அணியை தகுதிச்சுற்று மூலம் தேர்வு செய்யும் பணியானது நடைப்பெற்று வரக்கூடிய சூழலில் இரண்டாம் கட்ட தகுதிச்சுற்று போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வருகின்ற நவம்பர் 22 ஆம் தேதி மற்றும் 25ஆம் தேதி களைகட்டவுள்ளது. இதனையொட்டி, இந்த தகுதிச்சுற்று போட்டிகள் தொடர்பாக சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் செய்தியாளர் சந்திப்பு மற்றும் வீரர்கள் அறிமுக நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில், செய்தியாளர்களை சந்தித்த இந்திய கூடைப்பந்து சம்மேளனத் தலைவர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது, " கூடைப்பந்து போட்டி சென்னையில் நடைபெறுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. முதல் முறையாக ஆண்கள் சீனியர் கூடைப்பந்து போட்டி சென்னையில் நடைபெறுகிறது. 24 அணிகள் இந்த தகுதிச்சுற்றில் பங்கேற்க உள்ளனர். 3*3 பார்மட்டில் விளையாடுவதில் கவனம் செலுத்துகிறோம்.

அதற்காக, பயிற்சியாளரை நியமிப்பதற்கான பணியும் நடைப்பெற்று வருகிறது. வரும் பிப்ரமாதத்தில் தேசிய அளவிலான போட்டிகள் நடைபெற உள்ளன. 3*3 மற்றும் 5*5 ஆகிய இரண்டு பிரிவுகளிலும் கவனம் செலுத்தி வருகிறோம். நான் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் உலகத் தரவரிசையில் முன்னேறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பயிற்சியாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். கிராஸ் ரூட் அளவில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு 13 வயது முதல் இலவச கல்வி, பயிற்சி தங்குமிடத்துடன் சர்வதேச உள்கட்டமைப்பை ஏற்படுத்தி வருகிறோம். 

4 ஆண்டுகளுக்குள் 10 அகாடமிகளை அமைக்க முடிவு செய்துள்ளோம். 2025 ஆம் ஆண்டில் அதன் மாற்றங்களைக் காணலாம். வீரர்களில் கவனம் செலுத்தியதால்தான் கிரிக்கெட் புகழ்பெற்றது. அதேபோல், லீக் நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட்டைப் போன்று கூடைப்பந்து வீரர்களுக்கு ஊதியம் அளிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் என்ன நடந்தது என்பது குறித்து சிந்திக்க விரும்பவில்லை.  புதிய கூட்டமைப்பு தொடங்கப்பட்ட பின்னர் அடுத்து வரும் காலங்களில் என்ன செய்ய வேண்டும் என்பதை பூஜ்ஜியத்தில் இருந்து மீண்டும் தொடங்குகிறோம்.

இந்திய வீரர்கள் விடுமுறை எடுக்காமல் செயல்பட்டு வருகின்றனர். சென்னையில் சர்வதேச போட்டிகள் நடந்தது இல்லை. தேசிய அளவில் போட்டிகள் நடந்திருந்தாலும் 13-14 வருடங்கள் முதல் சர்வதேச போட்டிகள் நடத்தப்படவில்லை. தமிழ்நாடு கூடைப்பந்தாட்டத்தின் மையமாக உள்ளது. விளையாட்டில் அரசின் பங்களிப்பைவிட சங்கங்களின் பங்களிப்பு முக்கியமானது. அதற்கான கட்டமைப்புகள் இல்லை. பயிற்சி மையங்கள் சரியாக இல்லை. உள்கட்டமைப்பும் இல்லை. அதிகளவிலான பயிற்சி மையங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். பள்ளி, கல்லூரிகளில் உள்கட்டமைப்பு இருந்தாலும், அதற்கான செயல்பாடுகள் இருக்காது. எனவே பள்ளி, கல்லூரிகள் உடன் இணைந்து கூடைப்பந்து வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம். 

ஆண், பெண் என இரு அணிகளும் 2026 ஆம் ஆண்டு ஆசிய போட்டிகளில் நன்றாக செயல்படுவதற்காக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம். திருநங்கைகளையும் விளையாட்டில் ஈடுபடுத்தி அதன்மூலம் அவர்களுக்கும் வாய்ப்பளித்து அரசு மூலம் இணைந்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ருநங்கைகளுக்கென்று தனியாக விளையாட்டு அமைப்புகள், சங்கங்கள் இல்லை. ஆசியக் கோப்பை கூடைப்பந்து தகுதிச்சுற்றுக்கு தமிழ்நாடு அரசு முழு ஆதரவளித்து வருகிறது. விளையாட்டைப் பொறுத்துவரை மாநிலம் பொருட்டல்ல. இந்திய அணியாகத்தான் பார்க்கிறோம். 

திறமைதான் முக்கியம். மதம், மாநிலம் ஆகியவற்றை முன்னிறுத்தி செயல்படுவதில்லை. இந்திய அணியாக மட்டுமே செயல்படுகிறோம். ஒலிம்பிக்கில் இந்திய அணி பதக்கம் வெல்வதை நோக்கித்தான் செயல்படுகிறோம். ரசிகர்கள் இப்போட்டியை இலவசமாக பார்க்கலாம். கடந்த 8 மாதங்களாக இந்திய வீரர்களுக்கி சென்னையில் பயிற்சியளித்து வருகிறோம். தேசிய அளவில் இந்திய அணி முதலிடத்தில். தமிழ்நாட்டில் கிரிக்கெட்டுக்குப் பின்னர் கூடைப்பந்து உள்ளது. பள்ளிக் குழந்தைகளுக்கு கூடைப்பந்து விளையாட்டு ஊக்கமளிக்கும். கூடைப்பந்து விளையாட்டைப் பொறுத்தவரை இந்தியாவில் திறமையில் பிரச்சினையில்லை. அதற்கான உள்கட்டமைப்பு, பயிற்சிகளை ஒருங்கிணைத்து பயணித்து வருகிறோம். தொழில்நுட்பத்துடன் இணைந்து கூடைப்பந்து விளையாட்டை மேம்படுத்த செயல்படுத்தி வருகிறோம். கடந்த 10 வருடங்களாக வீரர்கள் மிகவும் சோர்வாக இருந்தனர். தற்போது, வீரர்களை உற்சாகத்துடன் பயிற்சி மேற்கொண்டு வருகிறோம். 

மேலும் படிக்க | ரிஷப் பண்ட் vs துருவ் ஜூரேல்: இருவரும் பிளேயிங் லெவனில்... அப்போ விக்கெட் கீப்பர் யாரு?

ஆசியாவிலேயே முதல் 3 இடத்தில் இடம்பெறுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். உள்கட்டமைப்பு மூலம்தான் சர்வதேச தரத்திலான வீரர்களை உருவாக்க முடியும் அதற்கான பணிகளை தொடங்கி உள்ளோம். ஸ்பான்சர்கள் வரத் தொடங்கி உள்ளனர். கூடைப்பந்து விளையாட்டிலும் வாழ்வாதாரத்திற்காக பொருளாதாரரீதியாக பயன்களை பெறும்  சூழலையும் உருவாக்கும் திட்டத்தில் உள்ளனர். முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளோம் தெரிவித்தார்.

பயிற்சியாளர் ஸ்காட் பிளம்மிங் பேசுகையில், அமெரிக்காவைச் சேர்ந்த எனக்கு இந்தியா 2 வது வீடு போன்றது. என்.பி.ஏ போட்டிக்காக பயிற்சியளித்து வந்தேன். கடந்த சில மாதங்களாக கடுமையான பயிற்சிகளை அளித்து வருகிறோம். மிகவும் இளைமையான அணியாக இந்தியா உள்ளது. இந்திய வீரர்களின் திறமைக்கான அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும். கத்தாருக்கு எதிரான போட்டி குறித்து தற்போது எதுவும் தெரிவிக்க முடியாது. ஆனால், அந்தப் போட்டிக்கான பயிற்சிகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். உடற்தகுதி அடிப்படையிலும் இந்திய அணி தயாராக உள்ளது. 3*3 பார்மட்டில் விளையாடுவது 5*5 பார்மட்டை பாதிக்காது. கத்தார்,  கஜகஸ்தான் அணிகளை எதிர்கொள்ள தயாராகி உள்ளோம்" எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்க | பணத்திற்காக டெல்லி அணியில் இருந்து வெளியேறவில்லை... ரிஷப் பண்ட் பரபரப்பு - என்ன பிரச்னை?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News