செப்டம்பர் 18ம் தேதிக்குள் இந்த 4 ராசிக்காரர்களின் தலைவிதி மாறும்

Weekly Horoscope: வார ராசிபலன் கிரகங்களின் இயக்கத்தால் கணக்கிடப்படுகிறது. செப்டம்பர் 18 வரையிலான காலம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும், எனவே சிலர் கவனமாக இருக்க வேண்டும்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 12, 2022, 09:45 AM IST
  • இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்
  • உங்கள் ராசியின் நிலையை தெரிந்து கொள்ளுங்கள்
  • வாராந்திர ராசிபலன் 12-18 செப்டம்பர் 2022
செப்டம்பர் 18ம் தேதிக்குள் இந்த 4 ராசிக்காரர்களின் தலைவிதி மாறும் title=

வாராந்திர ராசிபலன் 12-18 செப்டம்பர் 2022: 12 செப்டம்பர் 2022, திங்கட்கிழமை அதாவது இன்று முதல் புதிய வாரம் தொடங்கியுள்ளது. அதன்படி சில ராசிக்காரர்கள் இந்த வாரம் கிரகங்கள் மற்றும் ராசிகளின் நிலையால் பலன் பெறுவார்கள் மற்றும் ஒரு சில ராசிக்காரர்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். எனவே இந்த வார எந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை உண்டாக்கித் தரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சாதனைகள் நிறைந்ததாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் தன்னம்பிக்கை வலுவாக அதிகரிக்கும். வருமான நிலை மேம்படும். பொறுமை மற்றும் விடாமுயற்சி வேண்டும்.

ரிஷபம்: இந்த வாரத்தின் ஆரம்பம் உங்களுக்கு இனிமையாக இருக்கும். புதிய நபர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். இருப்பினும், வாரத்தின் நடுப்பகுதியில், உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படலாம். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சூப்பர், 3 ராசிகளுக்கு சுமார் 

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உங்கள் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கூடும். மூதாதையர் சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் தீர்வடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

கடகம்: இந்த வாரம் நிலம் தொடர்பான பிரச்சனைகள் தீர்வுக்கு வரும், உங்களின் மன உளைச்சல் நீங்கும். இருப்பினும், இந்த வாரம் பொருளாதார பட்ஜெட்டை உருவாக்கி அதன்படி செயல்படவும். அதேபோல் வியாபாரிகளுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும்.

சிம்மம்: சிம்மம் ராசிக்காரர்கள் இந்த வார தொடக்கத்தில் சில மகிழ்ச்சியான செய்திகளைப் பெறலாம். மூத்தவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். கோபத்தில் எந்த முடிவையும் எடுக்காதீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடும்.

கன்னி: இந்த வாரம் உங்களின் பணி நடை மேம்படும். நீங்கள் ஆற்றலுடன் உணர்வீர்கள். உறவினர்களுடன் ஒருவித கருத்து வேறுபாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகும். பொருளாதார நிலை மேம்படும்.

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு இக்காலம் வரப்பிரசாதமாகும் அமையும். இந்த வாரம் தடைப்பட்ட வேலைகளில் வேகம் பெறுவீர்கள். புதிய திட்டங்கள் தீட்டப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்த காரியங்களில் வெற்றி பெறுவார்கள்.

விருச்சிகம்: இந்த வாரம் உங்கள் அதிர்ஷ்டம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். எந்த ஒரு பிரச்சனையும் மூத்தவர்களின் ஆலோசனையால் தீர்க்கப்படும். கூட்டுத் தொழிலில் வெற்றி கிடைக்கும். இருப்பினும், வாரத்தின் நடுப்பகுதியில் சில நிதி இழப்புகள் ஏற்படலாம்.

தனுசு: இந்த வாரம் நீங்கள் சில செல்வாக்கு மிக்கவர்களை சந்திக்கலாம். நெருங்கியவர்களிடம் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நல்ல செய்திகள் கிடைக்கும். தடைபட்ட வேலைகள் நிறைவேறும். வரவு மற்றும் செலவில் சமத்துவம் இருக்கும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

கும்பம்: இந்த வாரம் உங்கள் வழக்கத்தில் மாற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். இடமாற்றத்திற்கான வாய்ப்புகளும் உள்ளன. காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உற்சாகம் நிறைந்ததாக இருக்கும். குடும்ப பிரச்சனையில் இருந்து விடுபடலாம். தொழில் சம்பந்தமான பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். காதல் உறவுகளில் இனிமை இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | சனி அமாவாசையில் சூரிய கிரகணம்; மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News