Personality By Zodiac Sign: தலைவிதியை மாற்றும் திறன் பெற்ற ‘5’ ராசிகள்..!!

Personality by Zodiac Sign: கடின உழைப்பு மற்றும் தைரியம் இருந்தால், ஒரு நபர் தனது விதியை மாற்ற முடியும். இந்த விஷயம் சிலருக்கு சரியாக பொருந்துகிறது என ஜோதிடத்திட  சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 6, 2022, 07:19 PM IST
  • கடின உழைப்பாலும் புத்திசாலித்தனத்தாலும் வாழ்க்கையை தன்வசப்படுத்துவார்கள்.
  • வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் அவர்களை ஒருபோதும் சோர்வடைய விடாது.
  • தலைவிதியை மாற்றும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு.
Personality By Zodiac Sign: தலைவிதியை மாற்றும் திறன் பெற்ற ‘5’ ராசிகள்..!! title=

Personality by Zodiac Sign: கடின உழைப்பு மற்றும் தைரியம் இருந்தால், ஒரு நபர் தனது விதியை மாற்ற முடியும். இந்த விஷயம் சிலருக்கு சரியாக பொருந்துகிறது என ஜோதிடத்திட  சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. சில ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். என்றாலும் சவால்களுக்கு அஞ்சாமல், தங்கள் கடின உழைப்பால், வாழ்க்கையை தன் வசப்படுத்துவார்கள். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அனைத்து விதமான சூழ்நிலையிலும் வெற்றி பெறும் திறன் உள்ளது என்பதை  அறிந்து கொள்ளலாம்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்கள் கடின உழைப்பாலும் புத்திசாலித்தனத்தாலும் வாழ்க்கையை தன்வசப்படுத்துவார்கள். வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் அவர்களை ஒருபோதும் சோர்வடைய விடாது, அவர்கள் விரும்பியதை அடையும் வரை ஓய்வதில்லை. தலைவிதியை மாற்றும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்கள் ஆற்றல் மிக்கவர்களாகப் பிறந்தவர்கள். முயற்சியில் தோல்வியுற்றாஅல் மனம் தளர் அமாட்டார்கள். அதில் வெற்றி பெற்ற பின்னரே  நிமாதியாக மூச்சு விடுவார்கள்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு வெற்றி எளிதாக இருக்காது கடின உழைப்பிற்குப் பிறகுதான் வெற்றியைப் பெறுவார்கள். ஒருபோதும் இலட்சியத்தை கைவிட மாட்டார்கள். என்ன தடைகள் வந்தாலும், இலட்சியத்தை அடைய உறுதியாக நிற்கிறார்கள். 

மேஷம்: 

மேஷ ராசிக்காரர்கள் மிகவும் கடின உழைப்பாளிகள். சோர்வு என்ற வார்த்தை இவர்களின் அகராதியில் இல்லை என்றே சொல்லலாம். கூடுதலாக, பிடிவாத தன்மை கொண்டவர்கள். அவர்கள் முடிவெடுத்ததைச் செய்து வாழ்கிறார்கள், அவர்களால் முடியாத வேலை எதுவும் இல்லை.  

மகரம்: 

மகர ராசிக்கு அதிபதியான சனி, பிறப்பால் கடின உழைப்பாளிகள். அவர்கள் அதிர்ஷ்டத்தை விட முயற்சிகளை நம்பி எப்போதும் கடினமாக உழைக்கும் தன்மை உள்ளவர்கள். தங்கள் கடின உழைப்பால் உயர்ந்த நிலையை அடைகிறார்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )

மேலும் படிக்க | Astro: ஏழரை நாட்டு சனி பாதிப்பில் இருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்

மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News