சிம்மத்தில் சதுர்கிரஹி யோகம்! சூரியன் செவ்வாய் புதன் சந்திரன் இணைந்த யோகம்

Chaturgrahi Yoga: ஒரு ராசியில் நான்கு கிரகங்கள் இணைந்தால், சதுர்கிரஹி யோகம் உருவாகிறது, அதிலும், இன்று சுக்கிரனின் நாளான வெள்ளிக்கிழமையன்று, ஏற்படும் யோகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 18, 2023, 10:24 AM IST
  • வெள்ளிக்கிழமையன்று ஏற்படும் சதுர்கிரஹி யோகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது
  • ஒரு ராசியில் நான்கு கிரகங்கள் இணைந்தால், சதுர்கிரஹி யோகம் உருவாகிறது
  • 3 ராசிகளுக்கு சதுர்கிரஹி யோகம் உருவாகிறது
சிம்மத்தில் சதுர்கிரஹி யோகம்! சூரியன் செவ்வாய் புதன் சந்திரன் இணைந்த யோகம் title=

சிம்மத்திற்கு சூரியன் பெயர்ச்சியானபோது, சிம்ம ராசியில் ஏற்கனவே இருந்த புதன் மற்றும் செவ்வாயுடன் ஆதித்யன் எனப்படும் சூரிய கிரகம் இணைந்து ஒரே வீட்டில் இருந்த நிலையில், இன்று நவக்கிரகங்களில் மனோகாரகனான சந்திரனும் சிம்ம ராசிக்கு வருவதால்  சதுர்கிரஹி யோகம் ஏற்பட்டுள்ளது. ஒரு ராசியில் நான்கு கிரகங்கள் இணைந்தால், அதை சதுர்கிரஹி யோகம் என்கிறோம்.

அதிலும், இன்று சுக்கிரனின் நாளான வெள்ளிக்கிழமையன்று, ஏற்படும் சதுர்கிரஹி யோகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. சதுர்கிரஹி யோகம் உருவானதால், அனைவரின் வாழ்விலும் மங்களம் உண்டாகும் என்றாலும், சிலருக்கு அருமையாக இருந்தால், சிலருக்கு கொன்சம் கஷ்ட காலமாகத் தான் இருக்கும்.

சதுர்கிரஹி யோகம் ஏற்பட்டுள்ளதால், யாருக்கு நன்மை ஏற்படும்? தெரிந்து கொள்வோம்...

இந்த ராசிக்காரர்களுக்கு சதுர்கிரஹி யோகம் பலன் தரும்
ஒரு ஜாதகத்தில் சதுர்கிரஹி யோகம் ஏற்படுவது பல வகையான பலன்களைத் தரும். சதுர்கிரஹி யோகத்தை உருவாக்கும் கிரகங்களால் நிர்வகிக்கப்படும் அனைத்து ராசிகளையும் இந்த யோகம் முக்கியமாக பாதிக்கும். இம்முறை உருவாகும் சதுர்கிரஹி யோகம் சிம்மம், மிதுனம், கன்னி, ரிஷபம், துலாம், விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கு சிறப்பான பலனைத் தரும்.

சதுர்கிரஹி யோகத்தின் விளைவு
ஒரே ராசிக்குள் இரண்டுக்கும் மேற்பட்ட கிரகங்கள் நுழையும் போது, இந்த காலகட்டத்தில் பல்வேறு சூழ்நிலைகள் மற்றும் நிகழ்வுகள் ஏற்படலாம். சமூக, அரசியல் மற்றும் இயற்கை மாற்றங்களுக்கு வழிவகுக்கும். இந்த கிரகங்களின் சேர்க்கையின் கீழ் எதிர்பாராத நிகழ்வுகளை ஒரு தனிநபரிலும் சமூக மட்டத்திலும் எதிர்பார்க்கலாம்.

சிம்ம ராசியில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் இணைந்திருப்பதால், சில ராசிக்காரர்களின் சிந்தனையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.  

மேலும் படிக்க | வக்ரமடையும் புதன்... 10 நாட்களில் ‘இந்த’ ராசிகளின் தலைவிதி மாறும்..!!

உங்கள் ராசிக்கு சதுர்கிரஹி யோகத்தின் பலன்
சிம்ம ராசியில் சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் சேர்ந்திருப்பதால், சில ராசிகளுக்கு ராஜயோகம் என்று சொல்லலாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் யோகத்தால் பலன் அடைவார்கள் மற்றும் கடினமான சவால்களை எதிர்கொள்ள ஏற்ற நேரமாக இருக்கும். இந்த யோகத்தின் உருவாக்கம் ஒன்பதாம் வீட்டில் நடக்கிறது, இதனால் அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். காதல் வாழ்க்கை மேம்படும், இந்த சதுர்கிரஹி யோகம், உங்கள் வணிக தொடர்புகளை சிறந்த முறையில் செயல்பட வைக்கும் நேரமாக மாறும்.

குடும்பத்துடன் நேரத்தை செலவிடவும், வெளியூர் பயணங்களுக்கு ஓய்வு எடுக்கவும் இது சரியான நேரம். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் கலந்துகொண்டு சிறந்த மதிப்பெண்களைப் பெறுவதற்கும் நல்ல நேரம்.

மிதுனம்
சதுர்கிரஹி யோகம், மிதுன ராசிக்கு சுபபலன் தரும். தொல்லை தரும் கேள்விக்கு எளிதில் பதில் சொல்லும் தைரியத்தையும் கொடுக்குக்ம் இந்த யோகம், ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மலரும் மற்றும் உங்கள் துணையுடன் செலவிட போதுமான நேரமும் க்டைக்கும். குடும்பத்தில் உள்ள பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும், உடன் பிறந்தவர்களுடனான மன வேறுபாடு நீங்கி, நிம்மதி பிறக்கும்.

ரிஷபம்
சதுர்கிரஹி யோகத்தின் உருவாக்கம் ரிஷப ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். புதிய வாகனம் வாங்க இது சரியான நேரம் மற்றும் உங்கள் மூதாதையர் சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. குடும்பப் பிரச்சினைகளை எளிதாக தீர்க்கலாம். வேலையை மாற்ற நீங்கள் திட்டமிட்டிருந்தால், இது சரியான நேரமாக இருக்கும்.

மேலும் படிக்க | சீக்கிரமா பணக்காரர் ஆகனுமா? பூஜையறையில இந்த மாற்றங்களை செய்தால் குபேரரின் அருள் உறுதி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News