ராசிபலன் ஜூலை 9, 2023: இந்த ராசிகளுக்கு வெற்றிகள் காத்திருக்கின்றன

Daily Horoscope July 9, 2023: இன்றைய தினம் அனைத்து ராசிகளுக்கும் எப்படி இருக்கும்? யார் எதிர்பாராத பண வரவினை பெறுவார்கள்? யாருக்கு மகிழ்ச்சி காத்திருக்கின்றது? யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 9, 2023, 06:03 AM IST
  • உயர் அதிகாரிகளின் சந்திப்பு மற்றும் ஆதரவு ஏற்படும்.
  • முயற்சிக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும்.
  • எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
ராசிபலன் ஜூலை 9, 2023: இந்த ராசிகளுக்கு வெற்றிகள் காத்திருக்கின்றன title=

தினப்பலன், ஜூலை 9, 2023: கிரக மாற்றங்கள் மற்றும் பிற ஜோதிட அம்சங்களின் அடிப்படையில் அனைத்து ராசிக்காரர்களுக்கும் அன்றைய பலன்கள் அமைகின்றன.  இன்றைய தினம் அனைத்து ராசிகளுக்கும் எப்படி இருக்கும்? யார் எதிர்பாராத பண வரவினை பெறுவார்கள்? யாருக்கு மகிழ்ச்சி காத்திருக்கின்றது? யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? இதற்கான பதில்களை தெரிந்துகொள்ளாலாம். 

மேஷம்

மறைமுகமான சில தடைகளை வெற்றி கொள்வீர்கள். ஆடம்பரமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். வெளியூர் சார்ந்த பயணங்கள் கைகூடும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்பு குறையும். 

ரிஷபம்

உயர் அதிகாரிகளின் சந்திப்பு மற்றும் ஆதரவு ஏற்படும். முயற்சிக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கட்சிப் பணிகளில் புதிய வாய்ப்புகள் சாதகமாகும். பேச்சுக்களில் தன்னம்பிக்கை வெளிப்படும். சகோதரர் வகையில் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகன பயணங்களில் சில விரயங்கள் நேரிடலாம். 

மிதுனம்

நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். வீடு பராமரிப்பு சார்ந்த எண்ணங்கள் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தொழில் நிமிர்த்தமான அலைச்சல்களால் அனுபவம் மேம்படும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். சொந்த ஊர் தொடர்பான பயணங்கள் கைகூடும். 

கடகம்

நண்பர்களுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். செயல்களில் இருந்து வந்த எதிர்ப்புகள் விலகும். வெளிப்படையான சில பேச்சுக்களால் அனுகூலம் உண்டாகும். வர்த்தக பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். மனை மீதான கடன் உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். 

சிம்மம்

கடன் சார்ந்த விஷயங்களில் விவேகம் வேண்டும். பணிபுரியும் இடத்தில் பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத சில செலவுகள் நேரிடும். புதிய நபர்களால் மாற்றம் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. திடீர் பயணங்களால் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். 

கன்னி

சுற்றுலா செல்வது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். எதிலும் சிக்கனமாக செயல்படுவது சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். மனம் விரும்பிய படி செயல்படுவீர்கள். சிந்தனைகளில் தெளிவு ஏற்படும். கலகலப்பான சூழலால் மகிழ்ச்சி உண்டாகும். கல்வியில் மேன்மை ஏற்படும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சிக்கல்கள் குறையும். 

துலாம்

சுபகாரிய எண்ணங்கள் ஈடேறும். பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பழைய வாகனங்களை மாற்றுவீர்கள். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். கணவன், மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்லவும். 

விருச்சிகம்

புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தள்ளிப்போன சுபகாரியங்கள் கைகூடும். வித்தியாசமான முயற்சிகளில் ஆர்வம் உண்டாகும். தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். நண்பர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். அலுவலக பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மேலும் படிக்க | வித்யாகாரகன் புதனின் பெயர்ச்சி... சிலருக்கு சந்தோஷம்... சிலருக்கு சங்கடம்..!

தனுசு

கடன் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான ஆலோசனைகள் கிடைக்கும். பூர்வீக வீட்டை சீரமைப்பீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். தனவரவுகளால் திருப்தி ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தனிப்பட்ட சில விஷயங்களில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர்களின் வழியில் பொருட்சேர்க்கை ஏற்படும். அரசு காரியங்களில் சாதகமான சூழல் உண்டாகும். 

மகரம்

மனதில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு மேம்படும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். விளையாட்டுக்களில் ஆர்வம் அதிகரிக்கும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். பத்திரம் சார்ந்த விஷயங்களில் நன்மை ஏற்படும். 

கும்பம்

கொடுக்கல், வாங்கலில் லாபம் ஏற்படும். கல்வியில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். கனிவான பேச்சுக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராகும். புதிய வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தாரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். புதிய தொடர்புகள் ஆதாயத்தை கொடுக்கும். 

மீனம்

வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். வெளியூர் சார்ந்த பயணங்கள் உண்டாகும். ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளை செய்ய வேண்டிய சூழல் உண்டாகும். குழந்தைகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். எண்ணிய சில பணிகளில் மாற்றம் நேரிடும். ஜாமீன் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். சஞ்சலமான சிந்தனைகளால் முடிவு எடுப்பதில் தாமதம் உண்டாகும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சந்திரன்-குரு சேர்க்கை: 48 மணிநேரத்திற்குப் பிறகு இந்த ராசிகளுக்கு பண மழை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News