சூரியப் பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு பணம், அதிர்ஷ்டம், லக்

Sun Transit 2024 In Cancer: செவ்வாய்கிழமை அதாவது இன்று சூரிய கிரகம் கடக ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த பெயர்ச்சியின் காரணமாக அடுத்த 30 நாட்களுக்கு இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலன் கிடைக்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 16, 2024, 04:07 PM IST
  • கடக ராசியில் சூரியனின் பெயர்ச்சி.
  • ரிஷப ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்.
  • கன்னி ராசிக்காரர்கள் பண பலன்களைப் பெறுவார்கள்.
சூரியப் பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு பணம், அதிர்ஷ்டம், லக் title=

Surya Peyarchi In Cancer: ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தனது ராசியை மாற்றிக் கொண்டே இருக்கும். இந்த மாற்றத்தை நாம் கிரக பெயர்ச்சி என்கிறோம். இந்த கிரகப்பெயர்ச்சிகளின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் தென்படும். இதில் சில ராசிகளுக்கு சுப விளைவையும், சில ராசிகளுக்கு பிரச்சனைகளையும் தரக்கூடும்.

கிரகங்களில் சூரியனுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. ஏனெனில் கிரகங்களின் ராஜாவாக சூரியன் கருதப்படுகிறது. இந்த சூரிய கிரகமானது ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றும். சூரியனின் ராசியில் ஏற்படும் மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் சுப ஸ்தானத்தில் இருந்தால் அந்த நபருக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியும் உண்டாகும். அந்த வகையில் இன்று காலை 11:29 மணிக்கு சூரியன் கடக ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். சூரிய பகவான் அடுத்த மாதம் ஆகஸ்ட் 16 வரை கடக ராசியில் தான் பயணிப்பார். சூரியனின் இந்த ராசி மாற்றத்தால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் ஜொலிக்கலாம். இந்த ராசி மாற்றம் சிலருக்கு வரப்பிரசாதமாக அமையலாம். எனவே சூரியன் கடகத்தில் பெயர்ச்சி அடைந்துள்ளது எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

1.ரிஷபம்
கடக ராசியில் சூரியனின் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். இந்த ராசிக்காரர்களுக்கு வேலை சம்பந்தமாக வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும் அல்லது அங்கு குடியேற வாய்ப்பு கிடைக்கலாம். முயற்சிகளை செய்துக் கொண்டே இருக்கும். பலன் கட்டாயம் கிடைக்கும். இந்த பெயர்ச்சியால் உங்களின் தைரியம் அதிகரிக்கும் மற்றும் உங்களது பணியை அனைவரும் பாராட்டுவார்கள். பதவி, கௌரவம் கூடலாம். வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.

2. கன்னி
சூரியபகவானின் பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்கள் பண பலன்களைப் பெறுவார்கள். திடீர் பண வரவு உண்டாகும். வருமான அதிகரிக்கும், இதனால் வங்கி இருப்பும் அதிகரிக்கலாம். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வேலைகளைத் தொடங்கலாம். குழந்தை பாக்கியம் உண்டாகும்.

மேலும் படிக்க | உச்ச ஆட்டத்தில் குரு.. இந்த ராசிகளுக்கு ராஜதி ராஜ பொற்காலம், அதிர்ஷ்ட மழை 

3. துலாம்
கடக ராசியில் நிகழ்திருக்கும் சூரியப் பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். பெரிய சாதனையை செய்வீர்கள். இந்த நேரத்தில், உங்கள் திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். அரசியலில் பிரகாசிப்பீர்கள். உயர் பதவியைப் பெறலாம். பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறலாம்.

4. விருச்சிகம்
சூரியபகவானின் பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலிலுமே வெற்றி கிடைக்கும், அதிர்ஷ்டம் வலுவாக இருக்கும், தைரியம் அதிகரிக்கும். வியாபாரம் விரிவடையும். சமூக, சமய நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்.

5. கும்பம்
சூரியனின் ராசி மாற்றத்தால் கும்ப ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். இந்தக் காலக்கட்டத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்கும். தொழிலதிபர்களுக்கும் நல்ல நேரம்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | வக்ர சனியின் மாற்றத்தில் நன்மைகளைப் பெற உதவும் சனி பரிகாரங்கள்! வணங்கினால் வாழ்க்கை வளம் பெறும்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News