தந்தேரஸ் நாளில் பணமழையை பொழியப்போகும் சுக்கிரன்! லக்ஷ்மி-நாராயண யோகத்தால் ஜாலி தான்!

Lakshmi Narayan Yog : தந்தேராஸ் அன்று உருவாகும் லக்ஷ்மி நாராயண யோகம், 5 ராசிக்காரர்களுக்கு அளவில்லாத பணத்தை கொண்டு வந்து கொட்டும்... தீபாவளிக்கு ஜாலியாய் ஷாப்பிங் செய்யப் போகும் ராசிக்கார ராசிகள்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 23, 2024, 03:01 PM IST
  • சுக்கிரன் பெயர்ச்சியால் உருவாகும் யோகம்
  • லக்ஷ்மி-நாராயண யோகம்
  • தீபாவளிக்கு ஜாலியாய் ஷாப்பிங் செய்யலாமா?
தந்தேரஸ் நாளில் பணமழையை பொழியப்போகும் சுக்கிரன்! லக்ஷ்மி-நாராயண யோகத்தால் ஜாலி தான்! title=

தந்தேராஸ் நாள் தீபாவளிப் பண்டிகைக்கு முன்னதாகவே வரும்  அருமையான நாளாகும். அன்னை லட்சுமியை வணங்கி அருள் பெற சிறந்த நாளான தந்தேரஸ் நாள் அக்டோபர் 29 அன்று வருகிறது. தீபாவளி பண்டிகை கோலாகாலம் தந்தேரஸ் நாளில் தான் தொடங்குகிறது. தந்தேராஸ் நாளில் ஷாப்பிங் செய்வது செல்வத்தையும், வீட்டில் பொருள் வரத்தையும் அதிகரிக்கும் என்பதால், ஷாப்பிங் செய்யவும் மிகவும் மங்களகரமான நாளாக கருதப்படுகிறது.

வட இந்திய மக்களின் நம்பிக்கைகளின்படி, திருபாற்கடலை கடைந்தபோது, தந்தேராஸ் நாள் அன்று, தன்வந்திரி அமிர்தகலசத்துடன் வெளிவந்தார். தீபாவளிக்கு முன்பு வரும் திரயோதசி நாளான தந்தேராஸ் தினத்தன்று தன்வந்திரி ஜெயந்தி அனுசரிக்கப்படுகிறது. தன்வந்திரி கையில் ஏந்திய அமிர்த கலசத்தில் இருந்த அமிர்தம் ஒரு அகப்பையால் (கரண்டி) தேவர்கள் அனைவருக்கும் விநியோகம் செய்யப்பட்டது என்பது நம்பிக்கை.

இதன் அடிப்படையில் தான், தீபாவளியின்போது தந்தேராஸ் நாளன்று கரண்டி, கலசம் போன்ற சில பாத்திரங்களை வாங்குவதை வட இந்தியர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.  அதிலும், ஜோதிட சாஸ்திரப்படி இந்த ஆண்டு தந்தேராஸ் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனென்றால், இந்த நாளில் லக்ஷ்மி நாராயண யோகம் உருவாகிறது. 5 ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் மிகவும் சாதகமாக அமையும்.

லக்ஷ்மி நாராயண யோகத்தால் பலனடையப் போகும் ராசிகளை பற்றி தெரிந்து கொள்வோம்...

லக்ஷ்மி நாராயண யோகத்தால் மகிழப்போகும் ரிஷப ராசியினர்

ரிஷப ராசிக்காரர்களுக்கு லக்ஷ்மி நாராயண யோகத்தால் சுபகாலம் தொடங்கும். பணியிடத்தில் வெற்றி கிடைக்கும். தாம்பத்திய வாழ்வில் பிரச்சனைகள் இருந்தால் அதனைத் தீர்க்க முடியும். குடும்பத்தினருடனான உறவுகள் சுமுகமாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல செய்திகள் கிடைக்கலாம். மன உளைச்சலில் இருந்து விடுபட லக்ஷ்மி நாராயண யோகம் உதவும்.

லக்ஷ்மி நாராயண யோகத்தால் அதிர்ஷ்டத்தைப் பெறும் மிதுன ராசியினர்

லக்ஷ்மி-நாராயண யோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு நற்செய்தியைத் தரும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேர்வதால், பணிச்சுமை அதிகரித்தாலும் பாராட்டுகள் வந்து குவியும். லக்ஷ்மி நாராயண யோகத்தால் நிதி ஆதாயத்திற்கான நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும்.

மேலும் படிக்க | இந்த ரெண்டு கிரகங்களும் சேர்ந்தால் எப்போதுமே யோகம் தான்! புதனும் சூரியனும் இணையும் புதாதித்ய ராஜயோகம்!

லக்ஷ்மி நாராயண யோகத்தால் மகிழப்போகும் கடக ராசியினர்

கடக ராசிக்காரர்களுக்கு லக்ஷ்மி நாராயண யோகத்தால் வியாபாரம் அதிகரிக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக சுகிக்கும் என்றால், முதலீடுகள் நல்ல லாபம் கொடுக்கும். நல்ல செய்திகள் வந்துசேரும், மனதில் மகிழ்ச்சியைத் தரும் லக்ஷ்மி நாராயண யோகத்தால் சம்பளம் கூடும், பதவி உயர்வும், போனசும் உங்களுக்குத் தான்...  

லக்ஷ்மி நாராயண யோகத்தால் மகிழப்போகும் விருச்சிக ராசியினர்

விருச்சிக ராசிக்காரர்களின் நிதி நிலை, மேம்படும். வருமானத்திற்கான புதிய ஆதாரங்கள் உருவாகலாம். நிதி தொடர்பான விஷயங்களில் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் உண்டாகும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். வசதிகள் பெருகும். மன உளைச்சல்கள் ஒட்டுமொத்தமாக ஓடிப் போய்விடும்.

லக்ஷ்மி நாராயண யோகத்தால் மகிழப்போகும் மீன ராசியினர்

மீன ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கும் இந்த யோகம், சமூகத்தில் மரியாதையை அதிகரிக்கும். மூதாதையர்களின் சொத்துக்களில் இருந்து ஆதாயம் அடையலாம். நீண்ட நாட்களாக நீடித்த மனக்குழப்பக்கள், காரியத்தடைகள் அகலும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு விருப்பமான வேலை கிடைக்கும். மாணவர்கள் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறலாம்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | தீபாவளி 2024: இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம்... சனி பகவானின் விசேஷ அருள் கிட்டும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News